தமிழர் தேசிய இயக்கம் அலுவலகம் "சீல்" வைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமீபத்தில் தடை செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்க அலுவலகம் மற்றும் அதன் பத்திரிக்கை அலுவலகம்ஆகிவற்றை சென்னை போலீசார் இன்று காலை பூட்டி "சீல்" வைத்தனர்.

விடுதலைப்புலிகளை ஆதரித்ததாகக் கருதப்படும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி அவருடைய கட்சியும் பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதாக தமிழகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியனும் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் சென்னை-மயிலாப்பூரில் உள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் அலுவலகமும் அதன் பத்திரிக்கைஅலுவலகமும் இன்று காலை சென்னை போலீசாரால் பூட்டி "சீல்" வைக்கப்பட்டன.

தமிழக ஆளுநர் ராமமோகன் ராவின் உத்தரவின் பேரில் இந்த அலுவலகங்களை சீல் வைத்துள்ளதாக போலீசார்தெரிவித்தனர்.

மயிலாப்பூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் இந்த அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+