நாளை காவிரி கூட்டம்: ஜெ. இன்று டெல்லி பயணம்
சென்னை:
வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் நாளை டெல்லியில்காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடக்கிறது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர்எஸ்.எம். கிருஷ்ணாவும் கலந்து கொள்கினறனர்.
இதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) மாலை டெல்லி செல்கிறார். பொதுப்பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை, விவசாயத்துறை செயலாளர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவும் உடன்செல்கிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பிரதமர் வாஜ்பாய் இந்த ஆணையக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதையொட்டிநேற்று நடந்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது என்றுஅறிவிக்கப்பட்டது.
கர்நாடகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பிரச்சனை கிளப்ப முதல்வர்ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். இந் நிலையில் வீரப்பன் தனது கடத்தை நடத்தியுள்ளான்.
ஜெ.- கிருஷ்ணா ஆலோசிப்பர்:
இந்தக் கடத்தல் விவகாரம் குறித்தும் நாகப்பாவை வீரப்பனிடம் இருந்து மீட்பது குறித்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
இது குறித்து பிரதமரிடமும் இரு மாநில முதல்வர்களும் பேச உள்ளனர்.
ஜெயலலிதா டெல்லியில் 2 நாட்கள் தங்கியிருப்பார். அவர் புதன்கிழமை சென்னை திரும்புவார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications