வீட்டுக்குள் பிணமாக கிடந்த டாக்டர் குடும்பம்
மதுரை:
மதுரையில் டாக்டர் ஒருவரின் பூட்டிய வீட்டுக்குள் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அரைகுறையாக எரிக்கப்பட்டு பிணமாகக்கிடந்தனர்.
இவர்கள் விஷ ஊசி போடப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் வீட்டுக்குள்ளேயே எரிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் அந்தப் பகுதியில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தாசில்தார் நகர் ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ரங்கநாதன். இவர் விரகனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப்பணியாற்றி வருகிறார். இன்று காலை இவரது வீட்டிலிருந்து துர் நாற்றத்துடன் புகை வந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
போலீசார் வந்து வீட்டை உடைத்துப் பார்த்தபோது 5 பிணங்கள் கிடந்தன. டாக்டரின் மனைவி உஷாராணி, தாயார் கிருஷ்வேணி, மகன்மாதவன், மகள் பிருந்தா, அக்காள் மகன் ஸ்ரீராம் ஆகியோர் பிணமாகக் கிடந்தனர்.
அவர்களின் உடல்ளுக்கு அருகிலும் குப்பைத் தொட்டியிலும் காலியான சிரிஞ்சுகளும் கிடந்தன. அவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் இல்லாததால் அவர்கள் விஷ ஊசி போடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. உடல்களும்அரைகுறையாக எரிக்கப்பட்டுள்ளன.
இதில் டாக்டர் ரங்கராஜனின் உடல் இல்லை. அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
அந்த வீட்டின் வாசலில் கையால் எழுத்தப்பட்ட இரண்டு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், இவர்களை கந்து வட்டிக் கும்பல்கொலை செய்துள்ளதாகவும், டாக்டர் ரங்கராஜனையும் கொலை செய்து உடலை கண்டந்துண்டமாக வெட்டி கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசி விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நோட்டீஸ் போலீஸை திசை திருப்பவதற்காக டாக்டர் ரங்கராஜனாலேயே எழுதப்பட்டிருக்கலாம் என போலீசார்சந்தேகிக்கின்றனர். டாக்டர் ரங்கநாதன் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் குடும்பத்தினர் மதுரையில் கந்து வட்டிக் கும்பலிடம் பணம் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் இக் குடும்பத்தை வட்டிக் கும்பல்கள் மிரட்டி வந்ததாகவும் இதையடுத்து டாக்டர் ரங்கராஜனேதனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு ஊரைவிட்டு ஓடியிருக்கலாம் என்று போலீசார் கருதுகினறனர்.
அவரும் கூட தற்கொலை செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதால் அவரைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரையில் வட்டிக்குப் பணம் தந்து வரும் கும்பல்களால் பல குடும்பங்கள சீரழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வட்டி கட்டி முடியாதகுடும்பங்களின் பெண்களையும் கூட இந்தக் கும்பல்கள் நடுரோட்டில் வைத்து கையைப் பிடித்து இழுப்பது, மான பங்கம் செய்ய முயல்வதுபோன்ற கேவலமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த கந்து வட்டித்தொழிலில் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின்அடாவடிக்கு போலீகாரர்களும் துணையாக இருப்பதாலும், பல நேரங்களில் போலீஸ்காரர்களே பினாமியாக இருந்து இந்த கந்து வட்டித்தொழிலை நடத்துவதாலும் பல குடும்பங்களை தெருவுக்கு வந்துவிட்டன.
பல தொழில் நிறுவனங்களைக் கூட மூடச் செய்துவிட்டன இந்த கும்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications