கடத்தல் விவகாரம்: ஜெயலலிதா- கிருஷ்ணா கடும் மோல்
சென்னை:
வீரப்பனுக்கு திடீர் தெம்பும், தைரியமும் ஏற்பட கர்நாடக அரசின் அலட்சியப் போக்கு தான் காரணம் என முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். இதற்கு கடுப்புடன் பதிலளித்த கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆமாம்.. எல்லாவற்றும் நான் தான் காரணம் என்றார்.
வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்திச் செல்லப்பட்டது குறித்து கோட்டையில் நிருபர்களிடம் ஜெயலலிதாகூறியதாவது:
கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக கெம்பைய்யா இருந்த வரை அந்தப் படை மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால், நக்கீரன்கோபால் கைது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் தலைமையிலானதமிழக பத்திரிக்கையாளர்கள் சந்தித்துப பேசினர். அவர்கள் கிருஷ்ணாவிடம் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.
இதையடுத்து காரணமே இல்லாமல் கெம்பைய்யாவை கர்நாடக அரசு திடீரென்று நீக்கியது. அவர் அதிரடிப்படையின் தலைவராகஇருந்தபோது கர்நாடக பகுதியில் வீரப்பனின் ஆட்களை அடக்கி வைத்திருந்தார்.
இதனால் வீரப்பனும் வெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தான். சிறந்த அதிகாரியான கெம்பைய்யாவை திடீரென காரணமேஇல்லாமல் நீக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது இடத்தில் அதிகாரம் குறைந்த அதிகாரியை கர்நாடகம் நியமித்தது. இதன்மூலம்அதிரடிப்படையின் அதிகாரத்தையும் குறைத்துள்ளது.
இதுவரை ஐ.ஜி. நிலையில் இருந்த அதிகாரி கர்நாடக அதிரப்படையின் தலைவராக இருந்தார். இப்போது டி.ஐ.ஜி. நிலையில் உள்ளஅதிகாரியைத் தான் நியமித்துள்ளார்கள். மேலும் பழ.நெடுமாறன் போன்றவர்களையும் கூட கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.
கர்நாடக அரசின் இது போன்ற செயல்களால் வீரப்பனுக்கு திடீர் தெம்பும் தைரியமும் கிடைத்துவிட்டது. இதனால் தான் காரணமேஇல்லாமல் முன்னாள் அமைச்சரை வீடு தேடி வந்து கடத்திச் சென்றுள்ளான்.
அவனைப் பிடிக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இப்போது தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் இடையே சுமூகமான உறவு இல்லை.
இந்தக் கடத்தல் தொடர்பாக கர்நாடக முதல்வர் என்னுடன் இதுவரை தொலைபேசியில் பேசவில்லை என்றார் ஜெயலலிதா.
வீரப்பனுடன் பேச தூதரை அனுப்புவீர்களா என்று கேட்டபோது, இன்னும் அப்படிப்பட்ட நிலைமை உருவாகவில்லை என்றார் ஜெயலலிதா.
நாளை டெல்லியில் காவிரிக் கூட்டத்தின்போது இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து கிருஷ்ணாவுடன் பேசுவீர்களா என்று கேட்டபோது,சந்தர்ப்பம் கிடைத்தால் பேசுவேன் என்றார் ஜெயலலிதா.
கிருஷ்ணா கடுப்பு:
தன் மீது குற்றம் சாட்டி ஜெயலலிதா பேசியுள்ளதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, இந்த விவகாரத்துக்கு நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. முழுக்க முழுக்க நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.
நாகப்பா கடத்தல் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை இன்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூட்டினார்.
பெல்காமில் இருந்த அவர் அவசரமாக பெங்களூர் திரும்பினார். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கைக் குறித்துவிவாதித்தார்.
கர்நாடகத்தில் உள்ள ஹெக்டே தலைமையிலான ஜக்கிய ஜனதா தளமும், தேவே கெளடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளமும் இந்தவிவகாரத்தை வைத்து மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலி தரவுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications