கர்நாடக அதிகாரிகள் பேச மறுக்கிறார்கள்: தமிழக டி.ஜி.பி. புகார்
சென்னை:
நாகப்பா கடத்தல் விவகாரம் குறித்து கர்நாடக காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று தமிழக காவல்துறைடி.ஜி.பி. நெயில்வால் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று இரவு முதல் தொடர்ந்து முயற்சி செய்தும் கர்நாடக அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமானபதிலும் கிடைக்கவில்லை என்றார்.
தமிழக- கர்நாடக அதிரடிப்படையினர் இடையே சுமூக உறவு இல்லை, நாகப்பா கடத்தல் தொடர்பாக இதுவரை கர்நாடக அமைச்சர்என்னுடன் பேசவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழக டி.ஜி.பியும் அதே போன்ற குற்றச்சாட்டைக்கூறியுள்ளதால் இரு மாநிலங்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருவது உறுதியாகிறது.
இது குறித்து நெயில்வால் நிருபர்களிடம் கூறுகையில், நாகப்பாவின் கடத்தல் விவகாரம் சிறப்பு அதிரடிப் படைக்கு ஏற்பட்ட பெரும்பின்னடைவு தான். வீரப்பனின் மறைந்திருக்க வாய்ப்புள்ள இடங்களில் தேடுதல் வேட்டை தொடங்கிவிட்டது.
இது குறித்து நேரில் தெரிந்து கொள்ள நானே இன்று ாலை சத்தியமங்கலம் காட்டுக்குச் செல்கிறேன். இந்தக் கடத்தல் நடந்தது முதல் நேற்றுநள்ளிரவில் இருந்து நானும் தொடர்ந்து கர்நாடக காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.ஆனால், அவர்கள் யாரும் எங்களுடன் பேசவே தயாராக இல்லை என்றார் நெயில்வால்.
முன்னதாக கோட்டைக்கு வந்த நெயில்வால் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து காட்டுப் பகுதி நிலைமை குறித்து விவாதித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications