விரைந்தன தமிழக- கர்நாடக அதிரடிப் படைகள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தப்பட்டதையடுத்து அவன் மறைந்திருப்பதாகக் கருதப்படும் சாம்ராஜ்நகர் காட்டுப்பகுதிக்கு கர்நாடக அதிரடிப் படையினர் விரைந்துள்ளனர்.

இதே போல தமிழக அதிரடிப் படையினரும் சத்தியமங்கலம் பகுதிக்கு விரைந்துள்ளனர். இங்குள்ள எஸ்.எஸ். மகால் முகாமில்அதிரடிப்படையினருடன் அதன் தலைவர் தேவாரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் இந்தப் படையினரும் காட்டுக்குள்விரைந்தனர்.

அதிரடிப் படையினருக்கு உதவ ஈரோடு மாவட்ட எஸ்.பியும் சத்தியமங்கலத்துக்குச் சென்றுள்ளார்.

அதே போல கர்நாட மாநில டி.ஜி.பி. பாஸ்கர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சுபாஷ் பரணியும் சாம்ராஜ்நகர் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இந்தக் கடத்தலால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து உயர் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று காலை ஆலோசனைநடத்தினார். தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+