காவிரிக் கூட்டம்: டெல்லியில் ஜெ.- கிருஷ்ணா இன்று சந்திப்பு
டெல்லி:
வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டுள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர்ஆணையக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது.
இதில் தமிழக, கர்நாடக. கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா நேற்றுமாலையே டெல்லி சென்றுவிட்டார்.
இன்று டெல்லியில் செல்லும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நாகப்பாவை மீட்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தஉள்ளார்.
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க தமிழக அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது என பெங்களூரில் நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாகப்பா மீட்பு குறித்து ஜெயலலிதாவுடன் டெல்லியில் பேச்சு நடத்துவேன் என கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார். மேலும்வீரப்பனுக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அவனது குற்றச்சாட்டு குறித்து திறந்த மனதுடன் பேச்சுநடத்துவோம் என்றார்.
கிருஷ்ணாவின் அமெரிக்க பயணம் ரத்து:
நாகப்பா கடத்தல் விவகாரத்தால் அமெரிக்கா செல்லவிருந்த தனது திட்டத்தை கிருஷ்ணா ரத்து செய்துள்ளார்.
30ம் தேதி டெட்ராய்ட்டில் நடக்க இருந்த கன்னட மாநாட்டைத் துவக்கி வைக்க அவர் 29ம் தேதி அமெரிக்கா செல்வதாக இருந்தார்.ஆனால், இப்போது தனது பயணத்தை கிருஷ்ணா ரத்து செய்துவிட்டார்.
அத்வானி- கர்நாடக அமைச்சர் சந்திப்பு:
நாகப்பாவை மீட்க மத்திய அரசின் உதவி கோரப்படும் என்றும் கர்நாடகம் அறிவித்துள்ளது. இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானிஇன்று பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூர் வருகிறார்.
அப்போது அவரை நேரில் சந்தித்து உதவி கோரப் போவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications