ரஜினியை காட்டுக்கு அனுப்பலாமா? பதில் சொல்ல கருணாநிதி மறுப்பு
சென்னை:
எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநில முதல்வர்களை குறை கூறும் புதிய பழக்கத்தை ஜெயலலிதா கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார் என திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவை மீட்க இரு மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு மாநிலமுதல்வர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் உதவியையும் கோரவேண்டும்.
அதைவிட்டுவிட்டு இதற்கு கெம்ப்பையாவை கர்நாடகம் மாற்றியது தான் காரணம் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இது இருமாநில உறவுகளையும் பாதிக்கும்.
எதற்கெடுத்தாலும் அண்டை மாநில முதல்வர்களை குறை கூறுவது ஜெயலலிதாவுக்கு புதிய வழக்கமாகியுள்ளது. முதலில் அதை நிறுத்தவேண்டும். உருப்படியாக ஏதாவது செய்து நாகப்பாவை மீட்க முயற்சிக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை ஒரு மாநில அரசு மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இது வழக்கமானது தான். இந்த வழக்கான விஷயத்தைக்கூட ஜெயலலிதா விவகாரமாக்குவது தேவையில்லாதது.
மிகச் சிறந்த அதிகாரி, வீரப்பனை பிடித்துவிட்டு தான் இவர் வருவார் என்று ஆட்சியாளர்களால் மெச்சிக் கொள்ளப்பட்ட விஜய்குமாரைஏன் அதிரடிப்படையில் இருந்து தூக்கி சென்னை கமிஷ்னராக்கினார் ஜெயலலிதா? அது மாதிரி கர்நாடக அரசும் நிர்வாகரீதியில் மாற்றம்செய்தால் அதை எப்படி இவர் குறை கூறலாம்.
இரு மாநிலங்களும் பேசாமல் ராணுவத்தின் உதவியைக் கோருவது நல்லது. இந்த விஷயத்தில் முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.
வீரப்பனை பிடிக்க முடியாத கருணாநிதியே கைது செய் என்று நான் ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா சொன்னார். ஆனால், நான்அப்படிச் சொல்ல மாட்டேன் என்றார் கருணாநிதி.
வீரப்பனைப் பிடிக்க ரஜினியை அனுப்பலாம் என்ற ராமதாசின் யோசனை குறித்துக் கேட்டபோது, இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவிரும்பவில்லை என்றார் கருணாநிதி.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications