ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
தமிழக பத்திரிக்கையாளர்கள் மற்றும் பழ.நெடுமாறனின் நெருக்குதலால் தான் கர்நாடக அதிரடிப்படையின் தலைவர் கெம்பைய்யாமாற்றப்பட்டார் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கோபத்துடன் மறுத்தார்.
நேற்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார். கெம்பைய்யா மாற்றப்பட்டதால் தான்வீரப்பனுக்கு தெம்பும், துணிவும் ஏற்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் இக் குற்றச்சாட்டை கிருஷ்ணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
ஒரு அதிகாரியை மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. தமிவக பத்திரிக்கையாளர்கள் என்னைச்சந்தித்தபோது வீரப்பன் குறித்தோ, அதிரடிப்படை குறித்தோ எதுவும் பேசவில்லை.
பத்திரிக்கை சுதந்திரத்தை அதிரடிப்படைகள் அடக்குவதாகக் கூறி மனு தந்தார்கள். அவர்களது கருத்தை நான் ஒப்புக் கொண்டேன்.அவ்வளவு தான். கெம்பைய்யாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியதாக ஜெயலலிதா கூறுவது மிகவும் தவறான தகவல்.
டெல்லியில் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நான் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியைக் கோருவேன். இதுதொடர்பாக பிரதமருடன் பேசுவேன் என்றார் கிருஷ்ணா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications