வீரப்பனுக்கு ராஜ்குமார் தாழ்மையான கோரிக்கை
பெங்களூர்:
நாகப்பாவை விடுவிக்குமாறு வீரப்பனுக்கு நடிகர் ராஜ்குமார் மிகத் தாழ்மையான கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பனை நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நாகப்பாவைவிட்டுவிடு. வீரப்பனுடன் 3 மாதத்துக்கும் மேல் இருந்திருக்கிறேன். அவனைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவன் நாகப்பாவைநிச்சயம் கொல்ல மாட்டான்.
அவனிடம் எப்படிப் பேசினால் புரியும் என்று எனக்குத் தெரியும். ஆல் இந்தியா ரேடியோ மூலமாகவும் வீரப்பனுக்குக் கோரிக்கைவிடுவிக்க நான் தயாராக இருக்கிறேன்.
வீரப்பனுக்கு காட்டுப் பகுதி மிருகங்களை விட மிக நன்றாகத் தெரியும். காட்டில் அவனைத் தேடிப் பிடிப்பது மிக மிகக் கடினம். அதேநேரத்தில் நாகப்பாவை மீட்க தமிழக, கர்நாடக அரசுகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். என்னை பழ.நெடுமாறன் கடவுள் மாதிரி வந்துவிடுவித்தார். மனிதநேயத்தின் அடிப்படையில் அவர் அந்தக் காரியத்தைச் செய்தார் என்றார் ராஜ்குமார்.
நீங்களே காட்டுக்குள் தூதுவராகச் செல்வீர்களா என்று ஒரு நிருபர் கேட்டபோது இடைமறித்த அவரது மகன் ராகவேந்திர ராஜ்குமார்,நீங்களே வீரப்பனுக்கு ஐடியாக்கள் தராதீர்கள் என்றார்.
கர்நாடகத்தில் அமைதி:
நாகப்பா கடத்தையடுத்து நேற்று கர்நாடகத்தில் நிலவி வந்த பதற்றம் இன்று குறைந்தது. இதையடுத்து தமிழகம்- பெங்களூர் இடையிலானபஸ் போக்குவரத்து இன்று வழக்கம் போல் இருந்தது.
ஆனால், மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களுக்கு தமிழக பஸ்கள் இயக்கப்படவில்லை.
நேற்று இரவு சாம்ராஜ்நகரில் கர்நாடக போலீஸ் ஜீப் ஒன்று கல்வீச்சுக்கு உள்ளானது. மற்றபடி புதிய வன்முறைகள் ஏதும் நடக்கவில்லை.
ராஜ்குமார் குடும்பத்தினருடன் பேசிய பெங்களூர் காவல்துறை ஆணையர், அவரது ரசிகர்களையும் மக்களையும் அமைதியாகஇருக்குமாறு அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications
