இன்று முதல் சத்தியமூர்த்தி பவனில் காங். அலுவலகம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இன்று முதல் சத்தியமூர்த்தி பவனிலேயே அதிகாரப்பூர்வமாகச்செயல்படும்.
கடந்த 14ம் தேதி காங்கிரசுடன் தமாகா இணைந்த பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி,தங்கபாலு, குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் தமாகா தலைவருமானஜி.கே. வாசன் மற்றும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்ற இளங்கோவன் அந்தக் கட்டடத்தைப் பார்வையிட்டார்.சுமார் 15 நிமிடங்கள் அவர் சத்தியமூர்த்தி பவனைச் சுற்றிப் பார்த்தார்.
கடந்த 1996ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியை உருவாக்கி ஜி.கே.மூப்பனார் அப்போதே சத்தியமூர்த்தி பவன், காமராஜர் அரங்கம் உள்ளிட்ட பல முக்கியமான காங்கிரஸ்சொத்துக்களைக் கைப்பற்றிக் கொண்டார் என்பதும் காங்கிரஸ்-தமாகா இணைப்பு வரை அவை தமாகாவின் வசமேஇருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications