புதுக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் கைதி மர்ம சாவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துவிட்டதாகப் போலீசார் கூறியதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டை அருகே நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரும் அவருடைய மகன் ஐயப்பனும் தன்மகளைக் கடத்தியதாக அழகப்பன் என்பவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மணியையும் ஐயப்பனையும் நமணசமுத்திரம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை போலீஸ் நிலையத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துவிட்டதாகப் போலீசார் கூறினர்.
ஆனால் இதை நம்பாத மணியின் உறவினர்களும் பொதுமக்களும் அந்தப் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் தான் மணியை அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறி அவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் சமீப காலத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விசாரணைக் கைதி ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில்மர்மமான முறையில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications