மீண்டும் கர்நாடக அதிரடிப்படையில் கெம்பையா?
பெங்களூர்:
கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக மீண்டும் ஐ.ஜி. கெம்பையாவை நியமிக்க கர்நாடகம் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திய சம்பவத்திற்கு அதிரடிப்படை தலைவராக இருந்தகெம்பையா மாற்றப்பட்டது தான் காரணம் என்று அம்மாநில அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இதைக் கடுமையாக மறுத்து விட்டார்.
கெம்பையாவை அதிரடிப்படையிலிருந்து மாற்றிய காரணம் குறித்தும் இதுவரை தகவல் இல்லை. மேலும் அவரைமீண்டும் அதிரடிப்படைக்குத் தலைவராக நியமிப்பது குறித்தும் இதுவரை கர்நாடக அரசு எந்தவிதமான ஒருமுடிவும் எடுக்கவில்லை. ஆனால், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இப்போது கெம்பையா காட்டுப் பகுதியில் தான் இருக்கிறார். கர்நாடக அதிரடிப் படையின் இப்போதைய தலைவர்சர்மாவுக்கு உதவுவதற்காக நேற்று அவர் சாம்ராஜ்நகர் சென்றார். தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
நாகப்பாவின் வீட்டிற்கு நேற்று சென்ற அமைச்சர்கள் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டுத்திரும்பிய போது, கொள்ளேகால் பகுதி மக்கள் அவர்களை முற்றுகையிட்டு "கெரோ" செய்தனர்.
கெம்பையா அல்லது மற்றொரு முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பிதாரி ஆகியோரில் யாராவது ஒருவரைமீண்டும் அந்தப் படைக்குக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் அப்போது கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று கார்கே அவர்களிடம் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications