நாகப்பா கடத்தலால் ஓசூர் பாதிப்பு
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தலையடுத்து கர்நாடக எல்லையில் உள்ள தமிழக தொழில் நகரான ஓசூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ளது ஓசூர். கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருக்கு அருகே உள்ள முக்கிய தமிழக நகரம் இது.
கர்நாடகத்திலோ அல்லது பெங்களூரிலோ தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் ஓசூர் தான் அதிகம் பாதிக்கப்படும். காரணம், ஓசூரைச் சேர்ந்த வர்த்தகர்கள், பெங்களூர் சென்று தான் தங்களுக்கு வேண்டிய பொருட்களை மொத்தமாக வாங்கி வருவார்கள்.
தற்போது நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று விட்டதால் ஓசூர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பேருந்துகள், கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியுடன் நிறுத்தப்படுகின்றன. ஓசூரிலிருந்து அத்திப்பள்ளி வரை போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓட்டப்படுகின்றன.
மேலும், பெங்களூர் நகரில் 144 போலீஸ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கூட்டமாக சென்று பொருட்களை வாங்கவும் ஓசூர் வியாபாரிகள் பயப்படுகிறார்கள். இதனால் செவ்வாய்க்கிழமைதோறும் பெங்களூர் சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் இந்த செவ்வாய்க்கிழமையான நேற்று அங்கு செல்லவில்லை.
ஓசூரில் கன்னடர்கள் வசிக்கும் பகுதிகளான நேசியாபேட்டை, நகரத்துப் பேட்டை ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications