வீரப்பன் வளர்ச்சிக்கு கருணாநிதி தான் காரணம்: ஜெ. கடும் குற்றச்சாட்டு
டெல்லி:
வீரப்பன் இந்த அளவுக்கு மீண்டும் வளர்ந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
1991ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிரடிப்படை அமைக்கப்பட்டது. அப்போது வீரப்பன் கும்பலில் 150 பேர் இருந்தனர்.அவனிடம் நவீன ஆயுதங்களும், வெடி மருந்துகளும் குவிந்திருந்தன.
ஆனால், தேவாரம் தலைமையில் அமைக்கப்பட்ட அதிரடிப்படை தொடர்ந்து காட்டுக்குள் சோதனை நடத்தியது. 1996ம் ஆண்டு வரைவீரப்பனை 28 முறை நேருக்கு நேர் சந்தித்தது இந்தப் படை. இதில் அவன் கும்பலில் இருந்த பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டனர்.அவனிடம்ருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
150ல் இருந்து 5:
1996ம் ஆண்டில் வீரப்பனையும் சேர்த்து அந்தக் கும்பலில் 5 பேர் மட்டும் தான் இருந்தனர். அவன் உணவுக்காக அலைய வேண்டிய நிலைஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அவன் சரணடைந்துவிடக் கூடத் தயாரானான்.
ஆனால், அந்த நிலையில் தேர்தல் வந்தது. நான் தோல்வியடைந்தேன். கருணாநிதி முதல்வரானார். அவர் முதல்வாரானவுடன்அதிரடிப்படையின் நடவடிக்கைகளை முடக்கி வைத்தார். அதிரடிப் படைத் தலைவராக இருந்த தேவாரம் கருணாநிதியைச் சந்தித்துதொடர்ந்து வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறினார்.
ஆனால், அதை ஏற்காத கருணாநிதி, தேவாரத்தை டிஸ்மிஸ் செய்தார். அதிரடிப் படையையும் செயல்பட விடவில்லை. இதனால் வீரப்பனின்மீண்டும் பலம் பெற்றான். அவனிடம் மீண்டும் ஆயுதங்கள் குவிந்தன. அவன் மீண்டும் பல பெற கருணாநிதி வழி வகை செய்து தந்தார்.
கருணாநிதியின் அரசியல் தைரியம்:
வீரப்பனைப் பிடிக்க கருணாநிதி அரசியல் தைரியம் இல்லை. இதனால் தான் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஒடுக்கி வைக்கப்பட்ட வீரப்பன் கருணாநிதி ஆட்சியில் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றான்.
அதே போல வீரப்பன் விவகாரத்தில் தமிழக அரசு குறித்தும் என்னைப் பற்றியும் மிகத் தவறான செய்திகளை பத்திரிக்கைகள் வெளியிட்டுவருகின்றன.
பத்திரிக்கைகள் மீது பாய்ச்சல்:
நான் ஆட்சிககு வந்தவுடன் 100 நாட்களில் வீரப்பனைப் பிடிப்பேன் என்று கூறியதாக இன்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.நான் அப்படிச் சொன்னதே இல்லை. ஒருவேளை தேவாரம் அப்படி கூறியிருக்கலாம்.
அதே போல வீரப்பனைப் பிடிக்க இதுவரை ரூ. 41.69 கோடியை தமிழக அரசு செலவிட்டுள்ளதாக ஹிந்து பத்திரிக்கை கூறியுள்ளது. இதுமிகத் தவறான செய்தி. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 17.61 கோடி தான் அதிரடிப்படைக்கு செலவிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் ரூ. 8.50 கோடி செலவாகியுள்ளது. 2001ம் ஆண்டில் ரூ. 9.42 கோடி தான் செலவிடப்பட்டது. ஆனால், ஹிந்துபொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.
அதே போல நாகப்பா கடத்தலுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா தான் காரணம் என்று நான் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளது. நான் கூறியது கெம்பைய்யாவை மாற்றியது குறித்துத் தானே தவிர, கிருஷ்ணா தான் காரணம் என்றுஒருபோதும் கூறவில்லை. பத்திரிக்கைகள் தொடர்ந்து என்னைப் பற்றி தவறான, பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
வீரப்பனுக்கு மன்னிப்பு கிடையாது:
நான் இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அதிரடிப் படையின் செயல்பாடு வேகம் பிடித்தது. வீரப்பனுக்கு பொது மன்னிப்புவழக்கும் திட்டமே இல்லை. அவன் பிடிபட்டால் செய்த தவறுகளுக்கு தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
இந்தமுறை வீரப்பன் தந்த கேசட் எதுவும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றார் ஜெயலலிதா.
அத்வானியுடன் சந்திப்பு:
பின்னர் துணைப் பிரதமர் அத்வானியையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். வீரப்பனைப் பிடிக்க உதவிகள் கோரி ஒருகடிதத்தையும் கொடுத்தார் ஜெயலலிதா. சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும் என அத்வானி உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications