வெளிநாட்டை சேர்ந்த சோனியா பிரதமராக கூடாது: ஜெயலலிதா
டெல்லி:
வெளிநாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி பிரதமராவதை ஏற்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா கூறினார். வெளிநாட்டவர்கள்இந்தியாவின் உயர் பதவிகளுக்கு வருவதைத் தடை செய்ய சட்டம் கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரிக்கும் என்றார்.
இனி வரும் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
சமீபகாலமாகவே சோனியாவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் ஜெயலலிதா. இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம்பேசிய அவர்,
ஒரு இந்தியர் தான் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்பதில் அதிமுக தெளிவாக உள்ளது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தகாங்கிரஸ் கட்சிக்கு ஒரு இந்தியத் தலைவர் கிடைக்காதது மிகப் பெரிய அவமானம்.
யு-டர்ன் அடித்த காங்கிரஸ்:
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திய காங்கிரஸ் கட்சி சோனியாவை தலைவராக்கியதன் மூலம் யு டர்ன் அடித்துள்ளது. தேசியக் கட்சிஎன்று சொல்லிக் கொள்ளவே காங்கிரசுக்கு அருகதை இல்லை.
அவரைப் போய் பிரதமராக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு உதவ மாட்டேன். இந்தியாவில் நூறு கோடி பேர் உள்ளனர்.இவர்களில் ஒருவரைத் தான் பிரதமராக்க அதிமுக உதவும். சோனியா இந்தியக் குடியுரிமை தான் பெற்றுள்ளார். அவர் இந்தியர்அல்ல என்றார் ஜெயலலிதா.
எதுக்கு டீ பார்ட்டி:
இப்போது சோனியாவை எதிர்க்கும் நீங்கள், வாஜ்பாய் அரசைக் கவிழ்ப்பதற்காக 1999ம் ஆண்டில் இதே சோனியாவுக்கு ஏன்டீ-பார்ட்டி கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த டீ-பார்ட்டி சோனியாவை பிரதமராக்குவதற்காகவா நடந்தது. சோனியாபிரதமராக உதவுவேன் என்று எங்கேயாவது, எப்போதாவது, ஒருமுறையாவது நான் கூறியிருக்கிறேனா. இருந்தால் காட்டுங்கள்பார்ப்போம்.
ஜோதிபாசுவை எதிர்த்த சோனியா:
நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசுவை பிரதமராக்க அப்போது முயன்றேன். அதை எல்லா எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. ஆனால், அந்த முயற்சியைக் கெடுத்ததே இந்த சோனியா தான் எனறோர்.
இப்போது சோனியாவின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவில் 14 மாநிலங்களை ஆளுகிறது. இதனால் மக்கள்சோனியாவை ஏற்றுக் கொண்டதாகத் தானே அர்த்தம் என்று கேட்டபோது, அந்த மாநிலங்களை ஆளுவது இந்தியவைச் சேர்ந்தமுதல்வர்கள். அவர்களுக்குத் தான் மக்கள் வாக்களித்தார்கள்.
சோனியா போன்ற ஒரு வெளிநாட்டவரை பிரதமராக்கும் முயற்சி தேச நலனுக்கு மிக அபாயகரமானது. இதை தேசப் பற்றும்,சரியான சிந்தனையும் உள்ள யாரும் ஏற்க மாட்டார்கள் எனறார் ஜெயலலிதா.
தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என்று சோனியா அறிவித்தால் அவரை ஆதரிப்பீர்களா என்று கேட்டபோது,முதலில் அவர் அறிவிக்கட்டும் என்றார்.
பா.ஜ.கவுக்கு ஆதரவில்லை:
பொடா சட்டத்துக்கு ஆதரவு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆதரவு, இப்போது சோனியா எதிர்ப்பு என்று அடுத்தடுத்துபா.ஜ.கவை ஆதரிப்பதால் கூடிய விரைவில் மத்திய அரசுக் கூட்டணியில் சேர்ந்துவிடுவீர்களா என்று கேட்டதற்கு, நான்சோனியாவை எதிர்ப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்காக அல்ல. அக்கூட்டணியில் சேரும் எண்ணம் இல்லை.மத்திய அரசை பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரிக்கிறேன். ஒட்டுமொத்த ஆதரவு தர மாட்டேன் என்றார்.
விரைவில் 3வது அணி??:
காங்கிரசுக்கும் எதிர்ப்பு, பா.ஜ.கவுடனும் கூட்டணி இல்லை என்றால் வேறு எந்தக் கூட்டணியில் தான் சேருவீர்கள் என்றுகேட்டபோது, காலம் தான் அந்தக் கூட்டணியைக் காட்டும். மாநில கட்சியான எங்களுக்கு தேசிய கட்சிகளின் ஆதரவுதேவையில்லை. அவர்களுக்குத் தான் நாங்கள் தேவை என்றார் ஜெயலலிதா.
குஜராத்தில் நடந்த மதக் கலவரங்கள் மிகுந்த கண்டனத்துக்குரியவை. கலவரத்துக்கு ஒரு மாநில நிர்வாகவே உதவுவது கடும்கண்டனத்துக்குரியது. அதே நேரத்தில் குஜராத் தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் கமிஷன் அங்கு ஜனாதிபதி ஆட்சியைஅமலாக்கக் பரிந்துரைத்து தனது அதிகாரத்தை மீறியுள்ளதையும் ஏற்க இயலாது என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications