வீரப்பனை பிடிக்க ராணுவம் அவசியம்: தேவாரம்
மைசூர்:
மத்திய அரசின் உதவியில்லாமல், இந்திய ராணுவத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சந்தன வீரப்பனைப் பிடிக்கமுடியாது என்று கூட்டு அதிரடிப்படையின் தலைவர் வால்டர் தேவாரம் கூறினார்.
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட போதே தேவாரம் இந்த யோசனையைத் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளிடம்கூறியிருந்தார்.
தமிழக, கர்நாடக அதிரடிப்படையினரின் முக்கிய நோக்கமே வீரப்பனைப் பிடிப்பது என்பது தான். ஆனால்காட்டில் ஒளிந்து வாழும் அவனைப் பிடிக்க திறமையான பயிற்சி மட்டும் போதாது. காட்டுப் பகுதியை ஒட்டியுள்ளகிராம மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
ஆனால் அதிரடிப்படையினருக்கு இப்பணி சாதகமாக அமையவில்லை. எனவே இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை என்று அழைக்கப்படும் கறுப்புப்பூனைப் படை ஆகியவற்றைக் கொண்ட விசேஷ அதிரடிப் படையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
காட்டுப் பகுதியின் வரைபடத்தை வைத்துக் கொண்டு சிறு சிறு குழுக்களாக இந்திய ராணுவத்தினர் பிரிந்து காடுமுழுவதும் சென்று தேடுதல் வேட்டை நடத்தினால் வீரப்பனை சுலபமாகப் பிடித்து விடலாம் என்றும் அதிகாரிகள்கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் வீரப்பனைப் பிடிப்பது வரை எக்காரணத்தைக் கொண்டும் ராணுவத்தை மத்திய அரசு வாபஸ்பெறக் கூடாது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் கர்நாடகா கோரிக்கை:
இதற்கிடையே வீரப்பனைப் பிடிப்பதற்காக பாரா மிலிட்டரியைச் சேர்ந்த 4 பட்டாலியன் படைப் பிரிவுகளையும்கமாண்டோக்களையும் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கே இன்று கூறினார்.
மேலும் வீரப்பனைப் பிடிப்பதற்குத் தேவையான பல நவீன சாதனங்களையும் ஆயுதங்களையும் வழங்க வேண்டும்என்றும் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே கடந்த 1993ல் கர்நாடக, தமிழக அரசுகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு எல்லைப்பாதுகாப்புப் படையை அனுப்பி வைத்தது என்பதும் ஆனால் அவர்கள் வீரப்பனைப் பிடிக்க முடியாமல்திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications