சென்னை மாநகராட்சியில் பெரும் ரகளை: கத்தி, சோடா பாட்டில், மைக், செருப்புகள் பறந்தன
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று திமுக-அதிமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது.அப்போது சோடா பாட்டில்கள் வீசப்பட்டன. கத்திகளும் பறந்தன.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. உள்ளே வந்த திமுக கவுன்சிலர்களைபோலீசாரும் மாநகராட்சி காவலர்களும் முழுவதுமாக சோதனையிட்ட பின்னரே அனுமதித்தனர். பெண்கவுன்சிலர்களும் கூட சோதனையிடப்பட்டனர்.
கூட்டம் தொடங்கியதும் சாலைபோட டெண்டர்கள் விடப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்அதிமுகவினர் இதில் 10 சதவீதம் கமிஷன் அடித்துள்ளதாகவும் திமுக தலைவர் மலையன் புகார் கூறினார்.இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை இந்த டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்றும்கோரினார்.
ஆனால், அப்போது பேசிய துணை மேயர் கராத்தே தியாகராஜன் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர்பதிலளிப்பார் என்றார். உடனே ஆணையர் எழுந்து இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறினார்.
மலையன் தொடர்ந்து பேசுகையில், அதிமுகவினருக்கும், அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கும் மற்றும்வேண்டியவர்களுக்கும் மட்டுமே டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல லட்ச ரூபாய் முறைகேடுநடந்துள்ளது என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கராத்தே அறிவித்தார்.ஓட்டெடுப்புக்கே விடாமல் இந்தத் தீர்மானங்கள் நிறைவேறியதாக அவர் அறிவித்தவுடன் திமுக கவுன்சிலர்களும்காங்கிரஸ் கவுன்சிலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் கராத்தேவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக குரல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும்கோஷமிட்டனர்.
இரு தரப்பினரையும் அமைதியாக இருக்குமாறு கராத்தே தியாகராஜன் கோரினார். ஆனால் அமளி அதிகரித்தது.இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளுமுள்ளு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிமுக பெண் கவுன்சிலரான மங்கையர்கரசு திமுக உறுப்பினர்கள் மீது தனது செருப்பக் கழற்றிவீசினார். இதையடுத்து திமுகவினர் நாற்காலிகளைத் தூக்கி அதிமுகவினர் மீது வீசினர்.
உடனே அதிமுகவினர் மைக்குகளைப் பிடுங்கி எடுத்து திமுகவினரை அடித்தனர். அவர்களும் பதிலுக்குமைக்குகளைப் பிடுங்கி அடிக்க ஒரே ரணகளமானது. இதில் திமுக பெண் கவுன்சிலர் செல்வி சவுந்தர்ராஜனின்மண்டை உடைந்தது.
தங்களது கட்சியின் பெண் கவுன்சிலரின் மண்டயை அதிமுகவினர் உடைத்ததால் ஆத்திரமடைந்த திமுகவினர்தொடர்ந்து அதிமுகவினரைத் தாக்கினர்.
அப்போது திடீரென சோடா பாட்டில்கள் வீசப்பட்டன. இதனால் கவுன்சிலர்கள் அஞ்சி ஓடினர். கத்திகளும்வீசப்பட்டதாகத் தெரிகிறது. இதில் மேலும் 3 திமுக கவுன்சிலர்களும் காயமடைந்தனர். இவர்களுக்கு மண்டைஉடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு கராத்தே தியாகராஜன் சபையை விட்டு வெளியேறினார்.
அவர் வெளியேறிய பிறகு திமுக உறுப்பினர்களும், அதிமுகவினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
மோதல் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் திமுகவினர் புகார் கொடுத்தனர். தங்களை ரவுடிகள் தாக்கியதாகவும்புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று அங்கும் திமுக தரப்பினர் புகார்கொடுத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் திமுக உறுப்பினர்கள் பேசுகையில்,
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களையும் நன்றாகச் சோதித்த பிறகு தான் அவைக்காவலர்கள் உள்ளே அனுப்புகின்றனர்.
ஆனால் அதையும் மீறி சோடா பாட்டில்களும் கத்திகளும் எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை.அதிமுகவினர் சில ரவுடிகளையும் இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
திமுக உறுப்பினர்களைக் காவலர்கள் சரியாகச் சோதனை செய்யாமல் அனுப்பினர். எனவே அவர்கள் தான் இந்தப்பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு வந்தார்கள் என்று திமுகவினர் கூறினர்.
கவுன்சிலர்கள் மோதலால் இன்று சென்னை மாநகராட்சி வளாகம் பெரும் பதட்டத்தில் மூழ்கியது.
அதிமுகவுக்கு மெஜாரிட்டி இல்லை:
இதற்கிடையே டெல்லியில் நேற்று பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணிஇல்லை என்று கூறியதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் அதிமுகவுக்குக் கொடுத்து வந்த ஆதரவைகாங்கிரஸ் விலக்கிக் கொண்டு விட்டது.
காங்கிரசைச் சேர்ந்த 16 உறுப்பினர்களுடன் சேர்த்து தான் அதிமுக சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மைபெற்று விளங்கியது.
ஆனால் தற்போது காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து வெறும் 68 உறுப்பினர்கள்மட்டுமே அதிமுகவில் உள்ளனர்.
இதனால் இன்று மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானங்கள் அனைத்தும் செல்லாதுஎன்றும் அவற்றுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர்கள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications