For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பற்றிய உண்மைகளை வெளியிடுவோம்: இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதாநிறுத்திக் கொள்ளாவிட்டால், நாங்களும் அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டி வரும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

காங்கிரசின் கைவசம் தற்போது மீண்டும் வந்துள்ள சென்னை-சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் ஜெயலலிதா.
சோனியாவின் மன்னிப்பு:

அந்த நன்றிக் கடனைக் கூட அவர் மறந்து விட்டார். ஆனால் அதை எங்கள் தலைவி சோனியா காந்தி மன்னித்துஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார்.

இப்போது சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்று தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார்ஜெயலலிதா.

சோனியாவைப் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்க அருகதையே இல்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் தேசியஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து வரும் காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அவர்.

சோனியா இந்தியர் தான் என்பதை நீதிமன்றம் மட்டுமல்ல மக்கள் மன்றங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன.இல்லையென்றால் காங்கிரஸ் தலைவராக சோனியா பதவியேற்ற பின்னர் 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிஅமைத்திருக்க முடியுமா?

காவிரி தோல்வியை மறைக்க..

டெல்லிக்குப் போய் காவிரிப் பிரச்சனை குறித்துப் பேசி தமிழக விவசாயிகளுக்கு நல்ல தீர்வைக் கண்டு வருவார்என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் காவிரி ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, அந்தப் பிரச்சனையையே மறந்து விட்டுசோனியாவைக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்துள்ளார்.

இதன் மூலம் இவரை நம்பிய தமிழக விவசாயிகளை ஜெயலலிதா கடுமையாக ஏமாற்றியுள்ளார். இதைமறைப்பதற்காக சோனியாவைத் திட்டி செய்திகளை பரபரப்பாக்கி காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வியைமறைக்கப் பார்க்கிறார்.

ஜெ. பற்றிய உண்மைகள்..

பாரதீய ஜனதாக் கட்சியை சமாதானம் செய்வதற்காகவே சோனியாவை தேவையில்லாமல் விமர்சித்துள்ளார்ஜெயலலிதா. இந்தப் போக்கை இத்தோடு இவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் ஜெயலலிதா குறித்து நாங்களும் பல்வேறு விஷயங்களையும் பேச வேண்டி வரும்.

வேறு மாநிலத்தவர் இந்த மாநிலத்தை ஆளக் கூடாது என்று எங்களாலும் அவரைப் பற்றிப் பேச முடியும்.(ஜெயலலிதா கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதை இவ்வாறு கூறினார் இளங்கோவன்.) ஆனால் இன்று வரைஅதைக் கூறாமல் பெருந்தன்மையாக அதை விட்டு வந்துள்ளோம்.

ஜெயலலிதாவுக்கு சவால்..

அடுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு ஒரு சவால் விடுகிறேன். உடனே ஆட்சியைக் கலைத்துவிட்டு தனியே நின்று தேர்தலைசந்திக்கட்டும். அவரது கட்சி வெற்றி பெற்றால் இனி அரசியலை விட்டே ஒதுங்கிவிட நான் தயார் என்றார்இளங்கோவன்.

போட்டி கொடும்பாவிகள்..

இதற்கிடையே ஜெயலலிதாவின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்களும் சோனியாவின் கொடும்பாவியைஅதிமுக தொண்டர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டி போட்டு எரித்து வருகின்றனர்.

சென்னையில் நேற்றே ஜெயலலிதாவின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்த நிலையில், இன்றும்சத்தியமூர்த்தி பவனில் ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டடத்தின் உள்பக்கமாகவைத்து தான் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இதனால் போலீசார் வெளியே நின்று கொண்டு வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. கட்சி அலுவலகத்துக்குள்நுழைந்தால் விவகாரமாகிவிடும் என்பதால் போலீசார் கையை பிசைந்தபடி நின்றிருந்தனர்.

சேலம், திருச்சியில்...

அதே போல யே சேலம் அருகே உள்ள ஓமநல்லூரிலும் ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் இன்று அதிகாலை காங்கிரஸ் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஜெயலலிதாவின் கொடும்பாவிஎரிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசாரைப் பார்த்ததும் காங்கிரஸ்தொண்டர்கள் ஆளுக்கொரு திசையாக ஓடி மறைந்து விட்டனர்.

நாகர்கோவிலில் சோனியாவின் கொடும்பாவியை அதிமுக தொண்டர்கள் எரித்தனர். இது தொடர்பாக அதிமுகஎம்.எல்.ஏவான ஆஸ்டின் உள்ளிட்ட பல அதிமுக தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.

இது போன்ற கொடும்பாவி எரிப்புச் சம்பவங்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் நடந்து வருவதைத் தொடர்ந்துஇரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X