வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று நண்பகலுக்குள் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. சுமார் 25 நாட்கள் வாட்டி எடுத்து வந்த கத்திரி வெயில் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. கத்திரி வெயில் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் என்பது குறையவில்லை. இன்று வரை வெயிலின் தாக்கம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 1.5 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரத்தில் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில், சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ், கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பகலில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று நண்பகலுக்குள் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications