கொட்டும் மழையில் வீரப்பனை தேடும் அதிரடிப் படையினர்
முடிபடுகடா:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பன் அம்மாநிலத்தின் முடிபடுகடா பகுதியில்நடமாடிக் கொண்டிருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் அப்பகுதியைமுற்றுகையிட்டுள்ளனர். இது திம்பம் மலைப் பகுதிக்கு அருகில் தான் உள்ளது.
நேற்று அவன் திம்பம் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று கருதிய அதிரடிப்படை அதனைமுற்றகையிட்டது.
நாகப்பா கடத்தப்பட்டதற்கு உதவி செய்த மதநாயக் என்பவரை அதிரடிப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வீரப்பன் இருக்கும் இடம் குறித்து அவரிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத்அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மதநாயக் கூறியதன் அடிப்படையில் தற்போது வீரப்பன் முடிபடுகடா பகுதியில் தான் திரிவதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அப்பகுதியை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு வீரப்பன் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் வீரப்பனை விரைவில் பிடித்து விடுவோம் என்றுஅதிரடிப்படை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் அதிரடிப்படை முகாமை தமிழக டி.ஜி.பி. நெயில்வால் இன்றுபார்வையிட்டார். அவருடன் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரும் செனறார். இருவரும் இன்றும்தேவாரத்துடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழக-கர்நாடக எல்லை நெடுகிலும் உள்ள காட்டுப் பகுதியை அதிரடிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர் என்றும் வீரப்பன் இன்னும் கர்நாடக எல்லைக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றும் தமிழகபகுதிக்குள் நுழையவில்லை என்றும் நெயில்வால் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
தேவாராம் கோரினால் கூடுதல் படைகளை அவருக்கு அனுப்புவோம் என்றார்.
கொட்டும் மழையில்..
இதற்கிடையே வீரப்பன் மறைந்துள்ளதாகக் கருதப்படும் காட்டுப் பகுதியில் தற்போது தொடர்ந்து கன மழைபெய்து வருகிறது.
ஆனாலும் அதையும் பொருட்படுத்தாது அதிரடிப்படையினர் தொடர்ந்து வீரப்பனைத் தேடும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளனர்.
வீரப்பனைப் பிடிப்பது தான் தங்களுடைய முதல் நோக்கம் என்று கூறும் அதிரடிப்படை வீரர்கள், அதே நேரத்தில்நாகப்பாவின் உயிருக்கும் ஆபத்து வராமல் அவரை மீட்க முயற்சிப்போம் என்றும் கூறினர்.
வீரப்பனுடன் பேச்சு நடத்த தயார்:
இதற்கிடையே நாகப்பாவை மீட்கும் முயற்சியில் வீரப்பனுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அரசுஅறிவித்துள்ளது.
வீரப்பனுடன் பேச்சு நடத்த யார் தயாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று அம்மாநிலசட்ட அமைச்சர் சந்திரே கவுடா இன்று நிருபர்களிடம் கூறினார்.
இருந்தாலும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினர் முழுமூச்சுடன் செயல்படுவார்கள் என்றும்அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications