சென்னை-மதுரை இடையே செப்.15 முதல் மீண்டும் "கூடல் எக்ஸ்பிரஸ்"
சென்னை:
வரும் செப்டம்பர் 15ம் தேதி சென்னைக்கும் மதுரைக்கும் இடையே சூப்பர் பாஸ்ட் "கூடல் எக்ஸ்பிரஸ்" ஓடத்தொடங்கும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
இன்று நிருபர்களிடம் மூர்த்தி கூறியதாவது:
சென்னைக்கும் மதுரைக்கும் இடையே ஓடிக் கொண்டிருந்த பகல் நேர ரயிலான "கூடல் எக்ஸ்பிரஸ்" சிலஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் 15ம் தேதி "கூடல் எக்ஸ்பிரஸ்" மீண்டும் ஓடத் தொடங்கும்.
சென்னை எழும்பூரிலிருந்து தினமும் காலை 8 மணிக்கு கிளம்பும் இந்த சூப்பர் பாஸ்ட் ரயில் பிற்பகல் 2 மணிக்குமதுரையைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் மதுரையிலிருந்து இந்த ரயில் பகல் 12 மணிக்குக் கிளம்பி இரவு 8 மணிக்குச் சென்னையைவந்தடையும்.
ரயிலில் குழந்தைகளுக்கு தொட்டில்:
மேலும் கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு செல்லும் கன்னியாகுமரி-நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும்அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ரயிலில் நாட்டிலேயே முதல் முறையாக குழந்தைகளுக்குத் தொட்டில் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 11 புதிய ரயில்கள் விடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. இதில் ஐந்து ரயில்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
விரைவில் மற்ற ஆறு ரயில்களையும் அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளனஎன்றார் மூர்த்தி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications