தலைமை நீதிபதிக்கு எதிராக வக்கீல்கள் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில்களை மூடுவதற்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியைமாற்றம் செய்யக் கோரி ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.கிர்பாலுக்கும் தமிழக வழக்கறிஞர்கள் தந்திகளை அனுப்பியுள்ளனர்.

நீதிமன்றக் கட்டணங்களை தமிழக அரசு சமீபத்தில் கடுமையாக உயர்த்தியது. இதை எதிர்த்து கடந்த ஒரு வாரமாகவழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து போராட்டம் நடத்துவதைத் தடுக்கும்பொருட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தெற்கு வாயிலைத் தவிர அனைத்து வாயில்களையும் மூடும் படி நீதிபதிசுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.

தலைமை நீதிபதியின் இந்த உத்தரவு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து நீதிபதி சுபாஷன் ரெட்டியை மாற்றக் கோரி டாக்டர் கலாமுக்கும் நீதிபதி கிர்பாலுக்கும் அவசரத்தந்திகளை அனுப்பியுள்ளனர். அந்தத் தந்தியில்,

சுமார் 150 ஆண்டு கால உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட உயர் நீதிமன்ற வாயில்களை மூடும்சம்பவம் நடைபெற்றதில்லை.

இவ்விஷயத்தில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தன்னிச்சையாவும் நியாயமற்ற வகையிலும் நடந்துள்ளார்.அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை வழக்கறிஞர்கள் சங்கமான "பார்" இழந்து விட்டது.

இதன் மூலம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களும் நீதிமன்றத்திற்குள் நுழைய முடியாத நிலைஏற்பட்டுள்ளது.

எனவே நீதிபதி சுபாஷன் ரெட்டியை உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்ற வேண்டும் என்றுதந்தியில் கூறப்பட்டுள்ளது.

""பதவி விலகத் தயார்"":

இதற்கிடையே, என்னுடைய இந்த உத்தரவில் தவறு இருப்பதாக மூத்த வழக்கறிஞர்கள் ஆராய்ந்து கூறினால், நான்பதவி விலகுவதற்குத் தயார் என்று நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறினார்.

சூழ்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்தே நீதிமன்ற வாயில்களை மூட வேண்டும் என்று உத்தரவிட்டேன்என்று கூறிய நீதிபதி, அவ்வாறு நான் செய்யாவிட்டால் ஒழுங்காக நீதிமன்றத்திற்கு வந்து வாதாடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜராக வரும் வக்கீல்கள் தாக்கப்படுவதை நான் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என்றும் நீதிபதிசுபாஷன் ரெட்டி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற வாயில்கள் மூடப்பட்ட கடந்த புதன்கிழமையன்று மட்டும் 65 வழக்குகளை நாங்கள் பைசல்செய்துள்ளோம். என்னுடைய உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் வந்து ஆராயட்டும். நான் செய்தது தவறுஎன்றால் பதவி விலகவும் தயாராக உள்ளேன் என்றும் நீதிபதி சுபாஷன் ரெட்டி ஆவேசத்துடன் கூறினார்.

வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும்:

இந்நிலையில் நீதிமன்றக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை எதிர்த்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தவழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.

நீதிமன்றக் கட்டண உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்ததயாராக இருப்பதாக ஜெயலலிதா அப்போது கூறினார். மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுஅமைக்கப்படும் என்றும் உறுதியளித்த அவர், வழக்கறிஞர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும்கேட்டுக் கொண்டார்.

ஆனால் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுபெரும்பாலான வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விளக்கம்:

இதற்கிடையே நீதிமன்றக் கட்டண உயர்வுகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

நீதிமன்ற வசதிகளைப் பெருக்கவும், நீதிமன்ற செலவுகளை சமாளிக்கவுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகசென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு நீதிபதி கேள்வி:

இதற்கிடையே நீதிமன்றக் கட்டண உயர்வுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுபாஷன் ரெட்டி தான் இதை விசாரித்து வருகிறார்.

இன்றைய விசாரணையின் போது நீதிமன்றக் கட்டணங்களை உயர்த்தியது ஏன் என்று அவர் தமிழக அரசுக்குக்கேள்வி எழுப்பினார்.

ஆனாலும் இவ்விஷயத்தில் நீதிமன்றத்தின் மூலம் அரசுக்கு அறிவுறுத்த இயலாது என்றும் நீதிமன்றக்கட்டணங்களை உயர்த்தும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என்றும் நீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+