ஜெயலலிதா மீது வாசன் பாய்ச்சல்
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருப்பதை முதல்வர் ஜெயலலிதாவால்பொறுத்துக் கொள்ள முடியாததால் தான் சோனியாவைத் தாக்கிப் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று அகிலஇந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே. வாசன் கூறினார்.
முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜி.கே. மூப்பனாரின் முதலாவது நினைவு தினம் இன்றுஅனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், வாசன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோர்மூப்பனாரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ஏழைகளுக்கு உதவிகளும் சமபந்தி விருந்தும் அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் வாசன்பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் சக்தியாக வருவதை ஜெயலலிதாவால் ஜீரணித்துக் கொள்ளவேமுடியவில்லை.
எனவே தான் சோனியா வெளிநாட்டவர் என்றும் இந்தியப் பிரதமராக அவர் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்றும் அவர் பேசி வருகிறார்.
இவ்வாறு பேசுவதை ஜெயலலிதா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் முதல்வர் என்ற முறையில்அவர் மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும்என்றார் வாசன்.
ஜெ. கொடும்பாவி தொடர்ந்து எரிப்பு:
இதற்கிடையே சோனியாவைத் தாக்கி ஜெயலலிதா பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்றும்கொடும்பாவி எரிக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்ததற்காக திருச்சியில் 10 காங்கிரஸ் தொண்டர்களும், ஈரோடு மாவட்டம்அந்தியூரில் 19 காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications