திண்டுக்கலுக்கு லாரி மூலம் வைகை குடிநீர்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
வைகை அணையிலிருந்து தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் விநியோகம்செய்யப்படவுள்ளதாக திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறினார்.
இதுதொடர்பாக மாநில ஊராட்சித்துறை அமைச்சரை சென்னையில் சந்தித்து பேசியுள்ளதாக பாலபாரதிதெரிவித்தார்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாக அமைச்சர் உறுதியளித்தார் என்றும் பாலபாரதி கூறினார்.
மேலும், தேவைப்பட்டால் சென்னையிலிருந்து லாரிகளை அனுப்புவதாகவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்என்றும் பாலபாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications