கம்ப்யூட்டர் மயமாகிறது திருச்சி மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கப்படவுள்ளதாக அம்மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டமான் கூறினார்.
திருச்சியில் நடந்த ரோட்டரி சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
இந்தியாவிலேயே முதல் றையாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படவுள்ளது.இதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதுதவிர திடக் கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டமும் திருச்சியில் தான் முழு வீச்சில்அமல்படுத்தப்படவுள்ளது.
திருச்சியை குப்பையில்லாத நகரமாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் சாருபாலா.












Click it and Unblock the Notifications