ஜெ. பேட்டி ... ஜெயா டிவியின் டெஸ்ட்டிங்?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று கொடுத்த பேட்டி ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது பலசெய்தியாளர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.
மிகவும் முக்கியமான பேட்டி, இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டம் மட்டுமேநேரடியாக ஒளிபரப்பப்படுவது பொதுவான வழக்கம்.
ஆனால் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை இல்லாத போது, நேரடியாக ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்னஎன்று செய்தியாளர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டனர்.
ஒருவேளை வீரப்பன் பிடிபட்டு விட்டானோ, அவனை நேரில் நிறுத்தி ஜெயலலிதா பேட்டி கொடுக்கப்போகிறாரோ என்றெல்லாம் செய்தியாளர்கள் மத்தியில் எண்ணங்கள் அலை மோதின.
நேரடி ஒளிபரப்பு குறித்து விசாரித்த போது, சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
அதாவது, ஜெயா டிவி விரைவில் செய்தி சானல் ஒன்றைத் துவக்கப் போகிறதாம். அதற்குரிய சோதனைகள்தற்போது நடந்து வருகிறதாம். அதன் ஒரு கட்டமாகவே ஜெயலலிதா கொடுத்த பேட்டியை நேரடியாக ஒளிபரப்புசெய்து பார்த்து பரீட்சித்துப் பார்த்தார்களாம்.
இப்படி ஒரு செய்தியாளர் சொன்னபோது, மற்ற செய்தியாளர்களுக்கு "சப்" என்று போய் விட்டது. ஆனாலும்ஜெயலலிதாவின் பேட்டியில் இருந்த காரம், செய்தியாளர்களை பக்கம் பக்கமாக எழுத வைத்து விட்டது என்பதைமறுக்க முடியாது.
தமிழும் ஆங்கிலமும் மாறி மாறி...
பேட்டி முழுவதும் கிட்டத்தட்ட ஆங்கிலத்திலேயே இருந்தது. அவ்வப்போது தமிழும் வந்து சென்றது. ஒருகட்டத்தில் "ஆங்கிலம் போதும், தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுப்போம்" என்று ஜெயலலிதாகூறியபோது, சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள் வெளியே எழுந்து சென்றனர்.
அதைப் பார்த்த ஜெயலலிதா, "இது நியாயமல்ல. அமருங்கள். இவ்வளவு நேரம் நான் ஆங்கிலத்தில் பேசும்போதுதமிழ் பத்திரிக்கை நிருபர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு பதில் சொல்லும்போது நீங்களும்உட்கார்ந்திருக்க வேண்டும். நீங்களும் தமிழர்கள் தானே" என்றார்.
அதைக் கேட்ட சில செய்தியாளர்கள், "இல்லை. இவர்கள் தெலுங்கர்கள், அவர்கள் மலையாளிகள் (அந்தநிருபர்கள் "மலையாள மனோரமா" மற்றும் "ஈநாடு" பத்திரிகைகளைச் சேர்ந்தவர்கள்) என்று கூறியபோது,ஜெயலலிதாவின் முகத்தில் சிரிப்பு வெடித்தது.
சோனியா குறித்து அவர் மிகவும் கோபமாகவும், ஆவேசமாகவும் கருத்துக் கூறியபோது அவரது முகம் சிவந்துகாணப்பட்டது. ஜெயலலிதாவின் அந்த "ரியாக்சனை" செய்தியாளர்கள் அனைவரும் மிகவும் அமைதியாக இருந்துகவனித்தனர்.
ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை ஜெயலலிதா மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். பல சமயங்களில்இந்தப் பேட்டி பொதுக் கூட்டம் போல காணப்பட்டது.
செய்தியாளர்கள் கேள்வி மேல் கேள்வியாக கேட்க முயன்றபோது, "போதுமே. ஒரே நாளில் உட்கார்ந்து பேசி விடவேண்டுமா" என்று செல்லமாக கடிந்து கொண்டார் ஜெயலலிதா.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் பேட்டி கலகலப்பாகவும், பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.












Click it and Unblock the Notifications