ஜெ. சொல்வது பொய்: கிருஷ்ணா
பெங்களூர்:
வீரப்பனுக்கு கர்நாடக அரசு ரூ.30 கோடி கொடுத்து தான் நடிகர் ராஜ்குமாரை அவனிடமிருந்து மீட்டது என்றதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு பொய்யானது என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்றுகூறினார்.
வீரப்பனுக்கு யார் மூலம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து கர்நாடக அரசு தான் விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்து கிருஷ்ணா நிருபர்களிடம் கோபத்துடன் கூறுகையில்,
தமிழக முதல்வர் என்ற உயர் பதவியை வகிக்கும் ஜெயலலிதா இது போன்று காட்டுத் தனமாகக் குற்றம் சாட்டுவதுதேவையில்லாதது.
வீரப்பனுக்கு ரூ.30 கோடி கொடுத்து தான் ராஜ்குமாரை கர்நாடக அரசு மீட்டது என்று ஜெயலலிதா பொய் கூறிவருகிறார்.
அவருடைய பேட்டியின் முழு விவரங்களையும் நான் தெரிந்து கொண்டு பின்னர் விரிவாகப் பேசுகிறேன் என்றுஅதே கோபத்துடன் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில்,
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்குத் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் என்னுடைய அரசு எடுத்து வருகிறது.
அதிரடிப்படையினரும் குண்டால் காட்டுப் பகுதியில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் நாகப்பாவின் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருக்கிறோம் என்றார் கிருஷ்ணா.
வீரப்பனைப் பிடிக்கும் விஷயத்தில் ஜெயலலிதா முன்னுக்குப் பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறாரே என்றுநிருபர்கள் கேட்டதற்கு, நான் கர்நாடகத்திற்காகவும் கர்நாடக மக்களுக்காகவும் மட்டும் தான் பேச முடியும்.தமிழகத்திற்காக எதையும் பேச முடியாது என்று பதிலளித்தார் கிருஷ்ணா.
இதற்கிடையே விடுமுறையில் செல்லும் கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் ஷர்மாவின் பொறுப்புக்களை கர்நாடகடி.ஜி.பியான பாஸ்கர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications