கொளத்தூர் மணி தம்பியுடன் கர்நாடக அரசு பேச்சு
பெங்களூர்:
வீரப்பன் பிடியில் சிக்கியுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பது தொடர்பாக வீரப்பனைச் சந்திக்க கர்நாடக அரசின் சார்பில் கொளத்தூர்மணியின் தம்பி பழனிச்சாமியை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக கொளத்தூர் மணியிடம் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. கொளத்தூர் மணி தற்போது கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு வழக்குகள் உள்ளன.
கடந்த மார்ச் மாதம் கர்நாடக அதிரடிப்படை போலீஸாரால் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார்.
வீரப்பனிடம் தூதராகச் செல்லத் தயார் என்று கொளத்தூர் மணி அறிவித்திருந்தார். ஆனால் அவரை அனுப்புவதற்கு சட்டரீதியான சில சிக்கல்கள்இருந்ததால், மணியின் ஆலோசனைப்படி அவரது தம்பியை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
பழனிச்சாமி போவதாக இருந்தால், தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினரின் நடவடிக்கை முற்றிலும் நிறுத்தப்பட்ட பிறகே காட்டுக்குள் செல்வார்என்று தெரிகிறது.
முன்னதாக இரண்டு கர்நாடக வழக்கறிஞர்களான சுப்புகிருஷ்ணா மற்றும் வேணுகோபால் ஆகிய இருவரில் ஒருவரை அனுப்ப கர்நாடக அரசு முடிவுசெய்திருந்தது. தூதராக சுப்புகிருஷ்ணாவின் பெயரையும் முதலில் கர்நாடக அரசு அறிவித்த போதிலும் இதுவரை அவரை அனுப்புவது குறித்து இறுதி முடிவுஎடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கொளத்தூர் மணியின் தம்பியை அனுப்ப கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பழனிச்சாமியை அனுப்பி நாகப்பாவை மீட்பது எளிதுஎன்றும் கர்நாடக அரசு கருதுகிறது.












Click it and Unblock the Notifications