ஆண்டோனியோ மேனோ: சோனியாவின் சொந்த பெயரை சொல்லி ஜெ. கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டோனியோ மேனோ என்ற சோனியா காந்தி ஒரு அரசியல் வியாபாரி. அந்த இத்தாலியப் பெண்ணிடம் இந்தியாவை அடமானம்வைத்துவிடக் கூடாது என முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா சோனியா காந்தியை மீண்டும் மீண்டும் ஆண்டோனியோ மேனோ என்று தான்குறிப்பிட்டார். சோனியா என்று கூறவேயில்லை.

ஜெயலலிதாவின் பேட்டி விவரம்:

ஆண்டோனியோ மேனோ என்ற சோனியா காந்திக்கு இத்தாலி மீது இருக்கும் தேசப் பற்றில் ஒரு சதவீதம் கூட இந்தியா மீது இல்லை.1968ம் ஆண்டு அவர் ராஜிவ் காந்தியை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவரது பெயர் ஆண்டோனியோமேனோ.

வந்தவர் இந்தியர் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கியிருக்க மட்டும் தான் அனுமதி கேட்டுவிண்ணப்பித்தார். இந்தக் காலக்கெடு 1973ம் ஆண்டு முடிந்தது. அப்போது கூட இந்தியக் குடியுரிமை கேட்கவில்லை. மீண்டும்இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதி கேட்டுத் தான் விண்ணப்பித்தார் ஆண்டோனியோ மேனோ.

இந்தக் காலக்கெடுவும் 1978ம் ஆண்டு முடிவடைந்தது. அப்போதும் தனது இத்தாலிய குடியுரிமையை இழக்க விரும்பாதஆண்டோனியோ மேனோ இந்தியக் குடியுரிமை கேட்கவில்லை. மேலும் 5 ஆண்டு காலம் இந்தியாவில் வாழ அனுமதி கேட்டார்.

இதனால் அவருக்கு தொடர்ந்து இந்தியாவில் வசிக்க வேண்டும் என்ற எண்ணமோ, இந்தியராக வாழ வேண்டும் என்ற வாழ வேண்டும்என்ற எண்ணமோ இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

1978ம் ஆண்டு அவர் 5 ஆண்டு காலம் இந்தியாவில் வசிக்க வாங்கிய அனுமதி 1983ம் ஆண்டு காலாவதியாக இருந்தது. இந் நிலையில்பிரதமரின் வீட்டில் ஒரு வெளிநாட்டுப் பெண் தங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டி இந்திரா காந்திக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் ஒருவழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கைப் போட்ட நபர் தனது மனுவில், இந்தியாவின் முக்கிய நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் வெளிநாட்டவரை மணக்கவேண்டுமானால், அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவ்வாறு அனுமதி கோரி கடிதம் தரும்போது தனது ராஜினாமாகடிதத்தையும் சேர்த்துத் தர வேணடும் என்றும் விதி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தார்.

ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி அமெரிக்கத் தூதரின் செயலாளராகப் பணியாற்றியதால் அந்த ராணுவ அதிகாரி தனது பதவியைராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கு விவகாரத்தால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் வற்புறுத்தியதால் இந்திய குடியுரிமை கேட்டுஆண்டோனியோ மேனோ விண்ணப்பம் செய்தார். ஆனால், இந்தியராக மாற ஆண்டோனியோ மேனோவுக்கு கொஞ்சம் கூட இஷ்டம்இல்லை.

ஆனால், மாமியார், கணவரின் வற்புறுத்தல் காரணமாக இந்திய பிரஜையாக மாற வேண்டா வெறுப்பாக விண்ணப்பம் செய்தார்.

அந்த நேரத்தில் சஞ்சய் காந்தி மரணமும் நடந்ததால் இந்திராவின் வாரிசு ராஜிவ் காந்தி தான் என்ற நிலை உருவானது. இதனால் கட்சியிலும்அரசாங்கத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தலாம் என்று திட்டமிட்ட ஆண்டோனியோ மேனோ இந்தியப் பிரஜையாக மாற முன் வந்தார்.

ஆனால், அதற்கான விண்ணப்பத்தில் கூட தனது பெயரை சோனியா (இந்திரா காந்தி வைத்த பெயர்) என்று குறிப்பிடவில்லை.ஆண்டோனியோ மேனோ என்று தான் கையெழுத்திட்டார். இந்த அளவுக்கு இந்தியப் பற்று கொண்டவர் ஆண்டோனியோ மேனோ.

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் இந்தியாவில் அவர் ஒரு இத்தாலியராகத் தான் வசித்தார். தன்னை இத்தாலியரகத்தான் கருதினார்.

இப்படிப்பட்ட ஒரு பெண்ணையா பிரதமராக்க முயல்கிறீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ்தொண்டர்கள், தலைவர்கள், எதிர்க் கட்சியினர் ஆகியோர் ஒருமுறை இந்த விஷயத்தில் ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

மேலும் ஆண்டோனியோ மேனோவின் ஆதிக்கம் இந்திய அரசில் ஓங்க ஆரம்பித்தபோது தான் பல இத்தாலிய நிறுவனங்கள் இந்தியாவில்ஊடுருவி ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. போபர்ஸ் வழக்கில் கூட சோனியாவின் நண்பரான ஒட்டாவியோ குவட்டராச்சிக்கு தொடர்புள்ளது.

அதே போல காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ரூ. 183 கோடி மதிப்புள்ள உர இறக்குமதி பேரத்திலும் இந்த குவாட்டராச்சிக்குத் தொடர்புள்ளது.அவரது ஷான் புரோஜெட்டி என்ற நிறுவனத்துக்கு இந்த அனுமதியைத் தருவதற்காக மத்திய அரசின் விதியையே மாற்றச் செய்தார்ஆண்டோனியோ மேனோ.

முதலில் பெட்ரோலிய அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த நிறுவனத்துக்கு அனுமதி தர மறுத்தது. இதையடுத்து புதியகமிட்டியை அமைத்து இந்த டெண்டரை குவாட்டராச்சிக்குத் தரச் செய்தார் ஆண்டோனியோ மேனோ.

ஆண்டோனியோ மேனோவும் அவரது சகோதரிகளும் சேர்ந்து விலை மதிக்க முடியாத சோழர் கால கலைப் பொக்கிஷங்களையும்,சிலைகளையும் இத்தாலிக்குக் கடத்தினர். இது தொடர்பாக சி.பி.ஐ. 1983ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2001ம்ஆண்டில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

இவர் மீதே கிரிமினல் வழக்கு நடந்து வரும்போது என் மீதான வழக்குகள் குறித்து காங்கிரஸ் பேசுவது வெட்கக் கேடானது.

இப்படிப்பட்ட ஆண்டோனியோ மேனோவுக்கு ஆதரவாக ஜெய்பால் ரெட்டி போன்றவர்கள் பேசுவது ஆச்சரியம் தருகிறது. இந்தஜெய்பால் ரெட்டி தான் ராஜிவ் மீது போபர்ஸ் குற்றச்சாட்டை சுமத்தி கடுமையாக விமர்சித்தவர். வங்கதேச விடுதலைக்காக போராடியவர்.இந்திராவையே எதிர்த்து போராடியவர். இவர் போய் இப்போது ஆண்டோனியோ மேனோவை ஆதரிக்கிறார். என்னை விமர்சிக்கிறார்.

அதே போல எனது சகோதரர் லாலு பிரசாத் யாதவும் ஆண்டோனியோ மேனோவுக்காக என்னை விமர்சித்துள்ளார். ராம் மனோகர்லோகியாவின் வழியில் வந்த லாலு ஆண்டோனியோ மேனோவை பிரதமராக ஏற்பது வருத்தமான விஷயம்.

நான் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். ஆண்டோனியோ மேனோவிவகாரத்தில் மனசாட்சிப்படி யோசியுங்கள், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

இந்தியாவில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சமா நிலவுகிறது? நம்மை நம்மால் ஆள முடியாதா? இத்தாலியரான ஆண்டோனியோ மேனோதான் நம்மை ஆள வேண்டுமா?

ஆண்டோனியோ மேனோவுக்கு இப்போதே, தான் பிரதமராகிவிட்டதைப் போன்ற நினைப்பு வந்துவிட்டது. அவரது பேச்சு, நடை, உடை,பாவனை எல்லாம் என்னவோ இவர் இப்போதே பிரதமராகிவிட்டதைப் போல உள்ளது.

கடந்த தேர்தலில் மூப்பனாரின் வற்புறுத்ததால் தான் காங்கிரசை கூட்டணயில் சேர்த்தேன். முதலில் காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்என்று கூறினேன். ஆனால், எனக்கு கொடுக்கும் தொகுதிகளில் சிலவற்றை காங்கிரசுக்குக் கொடுத்துக் கொள்கிறேன் என்று கூறி மூப்பனார்தான் அந்தக் கட்சியையும் அதிமுக கூட்டணயில் நுழைத்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு ரோஷம் இருந்தால் என் தயவில் ஜெயித்த 7 எம்.எல்.ஏ. பதவிகளையும், 3 எம்.பி. தொகுதிகளையும் ராஜினாமா செய்யவேண்டும். அவர்களுக்கு அவ்வளவு ரோஷம் எல்லாம் இருக்காது என்று எனக்குத் தெரியும்.

மத்தியில் தேர்தல் நடக்க இன்னும் ஒன்றரை வருடம் தான் பாக்கியுள்ளது. இதனால், உடனே ஆண்டோனியோ மேனோவுக்கு மாற்றாக ஒருதலைவரை நாம் அடையாளம் காண வேண்டும். இதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

ஆண்டோனியோ மேனோவுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவும் நான் தயார்.

வெளிநாட்டவர் உயர் பதவிக்கு வருவதைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதற்காக இரு அவைகளையும்கூட்ட வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+