வக்கீல்கள் போராட்டம் வாபஸ்: நீதிமன்றக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு
சென்னை:
நீதிமன்றக் கட்டண உயர்வுகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து தமிழக வழக்கறிஞர்கள் தங்கள்போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழக அரசு சமீபத்தில் நீதிமன்றக் கட்டணங்களைக் கடுமையாக உயர்த்தியது. இதனால் வழக்கறிஞர்களும்பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஒன்பது நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆரம்பத்தில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றக் கதவுகளைப் பூட்டி,ஜன்னல் கண்ணாடிகளைக் கூட உடைத்து ரகளை செய்தனர்.
இதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தெற்கு வாயிலைத் தவிர அனைத்து வாயில்களையும்பூட்டுவதற்கு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தனர். ஆனாலும் அந்தப் பேச்சுவார்த்தை பலனளிக்காமல் போனதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள்போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றக் கட்டண உயர்வை எதிர்த்து பல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. நேற்று இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றக் கட்டணஉயர்வுகளை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் சந்திரன் தெரிவித்தார்.
தமிழக அரசின் இந்த முடிவு சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கின்விசாரணை தசரா விடுமுறைக்குப் பின் நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். நீதிமன்றக் கட்டண உயர்வைஅரசு நிறுத்தி வைத்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர்கள் நேற்று நீதிமன்றத்துக்கு வெளியே வந்துபட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து இன்று வழக்கறிஞர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications