மீண்டும் "திகீர்" திருவிழா: பெண்களை சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் பூசாரிகள்
பரமக்குடி:
மதுரை மாவட்டம் பேரையூரில் சமீபத்தில் பரபரப்பூட்டிய குழி மாற்றுத் திருவிழாவை தொடர்ந்து ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அருகே கருமலையான் கோவில் பேய் ஓட்டுத் திருவிழாவும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
பேரையூரில் பூப்பெய்தாத சிறுமிகளை, குழியில் ஒரு நிமிடம் வரை புதைத்து பின்னர் எடுக்கும் பயங்கரமானதிருவிழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் பதவியை இழந்தார் துரைராஜ். அகில இந்தியஅளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண்கள் சம்பந்தப்பட்ட மற்றொரு திருவிழாவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கருமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேய் ஓட்டும்திருவிழா நடைபெறுகிறது.
இந்த விழாவின்போது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்டு வருகிறார்கள். ஊர் மத்தியில் உள்ள ஒருமைதானத்தில் அப்பெண்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
பின்னர் கையில் சாட்டையுடன் கோவில் பூசாரிகள் வருவார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்குள்பேய் தான் இறங்கியுள்ளதாகக் கூறுகின்றனர். பேய் இறங்கியுள்ளதாக கூறப்படும் பெண்களை சாட்டையால்பூசாரிகள் சரமாரியாக அடிக்கிறார்கள்.
அடி வாங்கும் பெண்கள் அருகில் உள்ள குளத்தில் போய் விழுகிறார்கள். வெளியே வரும் போது அவர்களுக்குள்இருந்த "பேய்" குளத்தில் இறங்கி விட்டதாக கூறி, வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள் உறவினர்கள்.
இந்த திருவிழாவை ஆயிரக்கணக்கானோர் கூடிப் பார்க்கின்றனர். ஏராளமான பெண்கள் இந்த நிகழ்ச்சியின்போதுசாட்டையால் அடிக்கப்படுகின்றனர்.
குழி மாற்றுத் திருவிழா பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் பெண்களை சாட்டையால் அடிக்கும் இந்த பேய்ஓட்டும் திருவிழா மீண்டும் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications