புலிகள் மீதான தடை நீக்கம்: புத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்ற இலங்கை அரசின் முடிவுக்கு அந்நாட்டு அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்குள்ள புத்த மதகுருமார்களும் இந்தத் தடை நீக்கத்தைக்கடுமையாக எதிர்த்துள்ளனர்.
புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரைநடைபெறவுள்ளது.
இதையடுத்து இலங்கை அரசு ஏற்கனவே அடிக்கடி தெரிவித்தது போல் பேச்சுவார்த்தைக்கு 10 நாட்களுக்கு முன்(அதாவது செப்டம்பர் 6ம் தேதி) புலிகள் மீதான தடை விலக்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திரிகா எதிர்த்தார். மேலும்புலிகளின் தனி ஈழ கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் புத்த மதகுருமார்களின் பிரதிநிதிகள் பலர் நேற்று இரவு சந்திரிகாவை சந்தித்துப் பேசினர். புலிகள்மீதான தடை நீக்கத்தைத் தாங்களும் எதிர்ப்பதாக அவர்கள் அப்போது சந்திரிகாவிடம் தெரிவித்தனர்.
மேலும் நாட்டின் பாதுகாப்புத்துறையை சந்திரிகா தன் வசமே வைத்துக் கொள்ளுமாறும் அந்த அதிகாரத்தைப்பயன்படுத்தி புலிகளுக்கு ஆதரவாக இலங்கை அரசின் பல செயல்பாடுகளையும் தடுக்க வேண்டும் என்றும்அவருக்கு புத்த மதகுருமார்கள் யோசனை தெரிவித்தனர்.
முன்னதாக புத்த மதகுருமார்கள் அனைவரும் ஊர்வலமாக சந்திரிகாவின் இல்லத்திற்குச் சென்றனர். அமைதிப்பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாட்டைத் துண்டாட முயல்வதாகக்குற்றம் சாட்டிய அவர்கள் அது தொடர்பான தங்களுடைய தீர்மானங்களையும் சந்திரிகாவிடம் அளித்தனர்.
தாய்லாந்துப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நாட்களில் இது தொடர்பாக போராட்டங்களை நடத்தப்போவதாகவும் புத்த மதகுருமார்கள் அறிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications