நாகப்பாவை மீட்க காட்டுக்குள் புகுந்த மக்கள்
கொள்ளேகால்:
வீரப்பனால் கடத்தப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காக கிராம மக்கள் சிலர்காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
நாகப்பாவின் ஆதரவாளர்கள் பலர் அலூர், கேதர்பாளையம் மற்றும் பி.ஆர். மலை காட்டுப் பகுதிகளில் புகுந்துவீரப்பனையும் அவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் நாகப்பா விரைவில் உயிருடன் திரும்ப வேண்டும் என்று வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளும்நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மாடு மேய்ப்பதற்காகவும் விறகு வெட்டுவதற்காகவும் காட்டுக்குள் செல்பவர்களிடம் நாகப்பாவின்உறவினர்களும் நண்பர்களும் மாத்திரைகளைக் கொடுத்து, வீரப்பனைச் சந்தித்தால் நாகப்பாவுக்காக இந்தமாத்திரைகளைக் கொடுத்து விடும்படி கேட்டுக் கொள்ளுமாறு கூறி வருகின்றனர்.
மைசூரில் பந்த்:
இதற்கிடையே நாகப்பாவை மீட்கக் கோரி இன்று மைசூரில் பந்த் நடைபெறுகிறது.
இந்த பந்த் காரணமாக மைசூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஹோட்டல்கள், சினிமாதியேட்டர்கள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்களும் ஓடவில்லை என்பதால் நகர்முழுவதும் பாலைவனம் போல காட்சியளிக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்துக்குபாஜகவும் ஆதரவு அளித்துள்ளது.
பந்த்தையொட்டி மைசூர் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் விரும்பத்தகாத சம்பவம்எதுவும் நிகழவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications