திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நெடுமாறன் ஆஜர்
திருச்செந்தூர்:
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாகதிருச்செந்தூர் நீதிமன்றத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு திருச்செந்தூரில் நடந்த ஒரு கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதாக 1994ல் வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் 1997ல் அவர் மீது குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இவ்வழக்கு தொடர்பாக நெடுமாறன் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு"பிடிவாரண்ட்"டும் திருச்செந்தூர் நீதிமன்றத்தால் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்றே அவர்கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கடலூர்சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். அன்று இரவு பாளையங்கோட்டை சிறையில்நெடுமாறன் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு அவர் பாளையங்கோட்டை சிறையிலிருந்து திருச்செந்தூர்நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல்வழங்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வரும் வியாழக்கிழமை (5ம் தேதி) மீண்டும் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி பால்துரை உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நெடுமாறனை பாளையங்கோட்டை சிறையிலேயே வைப்பதற்கு நீதிபதியிடம் போலீசார்அனுமதி கேட்டனர். அவர் உடனே நெடுமாறனின் விருப்பத்தைக் கேட்டார்.
நெடுமாறனோ, தன்னை கடலூர் சிறைக்கே கொண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரைகடலூர் சிறையிலேயே மீண்டும் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்செந்தூர் நீதிமன்ற வாசலில் நிருபர்களிடம் நெடுமாறன் பேசிகையில்,
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகப் போடப்பட்ட வழக்கை இப்போதுஎடுத்துள்ளனர்.
இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையையே காட்டுகிறது.
தமிழகம் முழுவதும் நான் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றியுள்ளேன். ஆனால் நான் இவ்வளவு நாட்களும்தலைமறைவாக இருந்ததாகக் கூறி போலீசார் என்னை இன்று இங்கு வந்து நிறுத்தி என்னைப் பழிவாங்கியுள்ளனர்என்றார் நெடுமாறன்.
பின்னர் அவர் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications