பா.ம.க. அதிருப்தி எம்.எல்.ஏ. திடீர் "பல்டி"
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியில் மனிதத்தன்மையற்ற முறையில் தான் நடத்தப்பட்டதாக கூறி, தனித்து செயல்படப்போவதாக அறிவித்திருந்த வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன், இப்போது பாமகவிலேயே தான்செயல்படப் போவதாக கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த தலித் பிரமுகரான முருகவேல்ராஜன், பாமகவில் இணைந்து வந்தவாசி தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தனக்கு கட்சியில் மரியாதை இல்லை என்றும், மனிதத் தன்மையே இல்லாமல் தான் நடத்தப்படுவதாகவும் கூறிசமீபத்தில் அவர் பரபரப்பான அறிக்கை விட்டார். தான் இனிமேல் சட்டசபையில் தனித்தே செயல்படப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு நேற்று திடீரென்று முருகவேல்ராஜன் சென்றார்.
அவருடன் நீண்ட நேரம் பேசிய பிறகு வெளியில் வந்த முருகவேல்ராஜன், தான் பாமகவிலேயே நீடிப்பதாகவும்,தனக்கு சில பிரச்சினைகள் இருந்ததாகவும், அதை ராமதாஸ் தீர்த்து விட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு மேல்எதையும் கூற அவர் மறுத்து விட்டார்.
முருகவேல்ராஜனின் இந்த திடீர் பல்டி பாமகவினருக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் சிவகாமி வின்சென்ட் எம்.எல்.ஏ மட்டுமே அதிருப்தி பாமக எம்.எல்.ஏவாக உள்ளார்.அவரையும் சீக்கிரமே சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.
-
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications