பிளஸ் டூ தேர்வுக் கட்டணம் கடும் உயர்வு: கல்விக்கு தடை போடும் தமிழக அரசு
சென்னை:
பிளஸ் டூ தேர்வுக்கான கட்டணத்தை தமிழக அரசு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு மாணவர்களை மிகக்கடுமையாக பாதிக்கவுள்ளது.
சமீப காலமாக கல்வித்துறையில் சில கடுமையான மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அரசுக் கல்லூரிகளைபல்கலைக்கழகங்களுடன் இணைத்துவிட்டு கல்லூரிகள் நடத்துவதில் இருந்து ஒதுங்கிக் கொள்ள அரசு முடிவு செய்தது.
இதனால் கட்டணம் உயரும் என்ற அச்சத்தால் மாணவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதை அரசுகண்டுகொள்ளவே இல்லை.
இந் நிலையில் பிளஸ் டூ அரசுத் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் போன்ற பிராக்டிகல் டெஸ்ட் கொண்ட பாடங்கள் பயிலும் மாணவ,மாணவிகள் பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ. 225 செலுத்த வேண்டும் என்றும், பிராக்டிகல் டெஸ்ட் இல்லாத பாடங்கள் படிக்கும் மாணவ,மாணவிகள் ரூ. 175 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தக் கட்டணங்கள் ரூ. 150 மற்றும் ரூ. 100 ஆக இருந்தன. இந்த ஆண்டு இவை கிட்டத்தட்ட இரு மடங்காகஉயர்த்தப்பட்டுள்ளன.
கட்டணம் ரூ. 150, ரூ. 100 ஆக இருந்தபோதே அதைக் கட்டுவதற்குள் மாணவர்களும் ஏழைப் பெற்றோர்களும் பட்ட பாடு அதைஅனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இப்போது கட்டணத்தை உயர்த்திவிட்டதன் மூலம் ஏழைகளுக்கு கல்வி போய் சேர்ந்துவிடாமல்அரசு தடுக்க முயல்வதாகவே தெரிகிறது.
குறிப்பாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே படிக்கும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், வீட்டின் எதிர்ப்பையும் மீறிபடிக்கும் மாணவிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications