சென்னை மாநகராட்சி காங். கவுன்சிலர்களிடையே பிளவு
சென்னை:
சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களிடையே பூசல் வெடித்துள்ளது. மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல்தலைமையில் ஒரு பிரிவினர் விரைவில் அதிமுகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. இதையடுத்து சட்டசபை தமாகாவில் பிளவு வெடித்தது. ஐந்து பேர்தனித்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற 18 எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக அங்கீகரிப்பது குறித்து இன்னும் சபாநாயகர்காளித்து முடிவு செய்யவில்லை.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மாநகராட்சி தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களிடையே பூசல் வெடித்துள்ளது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை தமாகா தலைவராக வெற்றிவேல் இருந்து வருகிறார். தற்போது இரு கட்சிகளும்இணைந்ததையடுத்து ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் ஒருங்கிணைந்த கட்சியின் தலைவராக யார் செயல்படுவது என்பதில் பூசல் வெடித்துள்ளது.
வெற்றிவேல் தன்னைத்தான் தலைவராகப் போட வேண்டும் என்று கோரி வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ராயபுரம் மனோதன்னைத்தான் தலைவராக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனால் சமீபத்தில் மாநகராட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரிந்து நின்று ஒரு பிரிவினர்திமுகவையும், மறு பிரிவினர் அதிமுகவையும் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு ராயபுரம் மனோ உள்ளிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள்மாநகராட்சி மன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெவித்தனர்.
ஆனால் வெற்றிவேல் உள்ளிட்ட அவரது ஆதரவு கவுன்சிலர்கள் ஜெ.வுக்கு எதிராக எதையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர். இதுகாங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் வெற்றிவேல் தலைமையிலான கவுன்சிலர்கள் விரைவில் அதிமுகவில் சேரலாம் என்று தெரிகிறது. அதற்குள் வெற்றிவேலைகட்சியிலிருந்து நீக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னாள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் ஒப்புதல் அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அதிமுக, சென்னைமாநகராட்சியில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. எனவே வெற்றிவேல் தலைமையிலான கவுன்சிலர்களை தன் பக்கம் இழுக்கஅதிமுக முயல்கிறது.
அப்படி நேர்ந்தால் பெரும்பான்மை பலத்தைத் தக்க வைக்கலாம் என்று அது கணக்குப் போடுகிறது.
வெற்றிவேல் தப்புவாரா அல்லது அதிமுகவுக்குத் தப்பி ஓடுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.
அதிமுகவில் சேருவதற்கு வசதியாகத் தான் அண்ணா அறிவாலய இட விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக மாநகராட்சியில் காய் நகர்த்திவருகிறார் வெற்றிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications