உணவு விஷமானது: அனாதை இல்லத்தைச் சேர்ந்த 120 பேர் உடல் நிலை பாதிப்பு
சென்னை:
சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அனாதை இல்லத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த இல்லத்தைச் சேர்ந்த 120 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சமூக நலத்துறையின் சார்பில் இந்த ஆதரவற்றோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள், முதியோர், ஆதரவற்றோர்,பெண்கள் ஆகியோர் தங்கி வாழ்ந்து வருகின்றனர். சுமார் 600 பேர் இங்கு இருந்து வருகின்றனர்.
இன்று பாலா- விஜயா என்ற தம்பதி தங்களது திருமண நாளையொட்டி இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.
கேசரியும், உப்புமாவும் கொண்டு வந்து அவர்கள் இந்த இல்லத்தினருக்குத் தந்தனர். அதை உண்ட 120 பேருக்கும் மயக்கமும், வாந்தியும்ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை மருத்துவமனைகளுக்கு கார், பஸ், லாரிகளில் கொண்டுசெல்லப்பட்டனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 64 பேரின் உடல் நிலை தேறியதால் அவர்கள் அனைவரும் மீண்டும்இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மற்ற 54 பேரும் தொடர்ந்து மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் குறித்து அறிந்தவுடன் சமூக நலத்துறைஅமைச்சர் வளர்மதி மருத்துவமனைக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார்.
கேசரி அல்லது உப்புமாவில் பல்லி விழுந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று தான் பாண்டிச்சேரியில் பள்ளிகளில் தரப்பட்ட இலவச காலை உணவு சாப்பிட்ட 2,000 மாணவ, மாணவியர் மயக்கமடைந்துமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு இன்று சென்னையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications