தமிழத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தர முடியாது: கர்நாடகம்
டெல்லி:
டெல்லியில் காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று காலை கூடியது.
இதில் கர்நாடக, தமிழக, கேரள, பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர்கள், பாசனத்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழம் ஆட்சேபத்துடன் கலந்து கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர்வாஜ்பாய்க்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இக் கூட்டம் தொடங்கியவுடன் பேசிய கர்நாடக தலைமைச் செயலாளர் ரவீந்திரா, தமிழகத்துக்குத் தொடர்ந்து 1.25 டி.எம்.சி. தண்ணீர் தரமுடியாத நிலையில் கர்நாடகம் உள்ளது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றார்.
அவருக்கு பதிலளித்த தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், இந்தக் கூட்டம் வறட்சிக் காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வதுதொடர்பாக பார்முலா வகுக்கத் தானே தவிர இப்போது காவிரியில் தண்ணீர் விடுவது குறித்து விவாதிக்க அல்ல என்றார்.
ஆரம்பத்திலேயே இரு மாநிலங்களின் கடும் மோதலுடன் இந்தக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் மத்திய நீர்வளத்துறைச்செயலாளர் கோஸ்வாமி தலைமையில் நடக்கிறதி.
இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையக் கூட்டத்தையும் உடனடியாகக் கூட்டுமாறு கர்நாடகம் வலியுறுத்தும் என்று தெரிகிறது. ஆனால்,இதையும் தமிழகம் எதிர்க்கும்.
காவிரி ஆணையக் கூட்டம் நடந்தால் அதில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை நிறுத்த அல்லது குறைக்க கர்நாடகம் கோரிக்கை விடுக்கும்.அதை பிரதமர் வாஜ்பாய் ஏற்றால் தமிழக விவசாயிகளின நிலைமை அதோகதியாகிவிடும்.
இதனால், இந்த ஆணையக் கூட்டத்தை இப்போதைக்குக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என தமிழகம் கூறுகிறது. ஆனால், வாஜ்பாய்வரும் 9ம் தேதி அமெரிக்கா புறப்படுவதால் அதற்கு ஆணையத்தைக் கூட்டச் செய்ய கர்நாடகம் முயல்கிறது. இது தொடர்பாக இன்றுமாலை வாஜ்பாயை கிருஷ்ணா சந்திக்க உள்ளார்.
ஆனால், 9ம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதால் கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று ஆணையத்தைக் கூட்ட பிரதமர் வாஜ்பாய்க்குபோதிய அவகாசம் இல்லை. இதனால் வாஜ்பாய் 15ம் தேதி டெல்லி திரும்பும் வரை அக் கூட்டம் நடக்காது என்று தெரிகிறது.
இது கர்நாடகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அடியாகும்.
தமிழகத்துக்கு பாக்கி வைத்த கர்நாடகம்:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைத் தர வேண்டும். ஆனால், இந்தஆண்டு 124 டி.எம்.சியை மட்டும் தந்துவிட்டு நீர் தருவதை கர்நாடகம் நிறுத்திவிட்டது.
தமிழகத்துக்கு 81 டி.எம்.சி. நீர் பாக்கி வைத்துள்ளது கர்நாடகம். இந்த 124 டி.எம்.சியைக் கூட வாராவாரம் தரவில்லை. எப்போதெல்லாம்தனது அணைக்கட்டுகள் நிரம்பி அதற்கு மேல் தண்ணீரை தேக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதோ அப்போது தான் நீரைத்திறந்துவிட்டுள்ளது.
இதனால், கர்நாடகத்தை நம்பி எந்தத் திட்டமும் போட்டு விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
மதிமுக கோரிக்கை:
இந் நிலையில் காவிரி குறித்து விவாதிக்க உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும் என மதிமுகஅவைத் தலைவர் எல்.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications