உதவி கலெக்டர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்: லஞசம் வாங்கி சேர்த்தது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள அனுமதி தர லாரிக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டர் இரவோடுஇரவாக கைது செய்யப்பட்டார்.
அவரது திருச்சி வீட்டில் நடந்தப்பட்ட ரெய்டில் ரூ 3 லட்சம் பிடிபட்டது.
தமிழகம் முழுவதும் உரிய லைசென்ஸ் பெறாமல் ஆறுகளில் மணலை அள்ளி கோடிகளைக் குவித்து வருகின்றனர் பல தொழிலதிபர்களும்அரசியல்வாதிகளும். இதைத் தடுத்த வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகளை பணத்தாலும் அதிகாரத்தாலும் விலைக்கு வாங்கிவருகின்றனர்.
எப்போதாவது பெயருக்கு ஏதாவது ஒரு லாரியைப் பிடித்து பைன் போடுவது வழக்கம். இந்த மணல் திருட்டில் வருவாய்த்துறையினருக்குமட்டுமல்லாமல் அந்தப் பகுதி போலீசாருக்கும் கணிசமான தொகை போய்விடுகிறது.
குறிப்பாக இரவுகளில் தான் தமிழகத்தின் ஆறுகளில் இந்த லைசென்ஸ் பெறாத அரைபாடி லாரிகள் மண்ணைத் திருடி வருகின்றன.
இந் நிலையில் தமிழகம் முழுவதுமே லஞ்ச-ஒழிப்புத்துறை ஆங்காங்கே லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப் பிடித்து வருகிறது. இதில் காசுவாங்கிக் கொண்டு மணல் அள்ள லாரிகளுக்கு அனுமதி தந்த ஒரு உதவி கலெக்டரும் பிடிபட்டுள்ளார்.
திருநெல்வேலியில் உதவி கலெக்டராக இருப்பவர் விக்டர் ரோஸ். தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு லாரியைமடக்கிய இவர் வழக்குப் போடப் போவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் லாரியையும் கைப்பற்றப் போவதாக மிரட்டிய இவர் தனக்கு ரூ. 1 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகக் கூறினார்.
இதையடுத்து அந்த லாரியின் உரிமையாளரான கல்குவாரி அதிபர் ஓடிவந்தார். அவர் பேரம் பேசி இந்த லஞ்சத்தை 90,000 ஆகக்குறைத்தார்.
பணத்தை தனது திருச்சி வீட்டில் வந்து கொடுக்குமாறு விக்டர் ரோஸ் கூறிவிட்டுச் சென்றார். ந்த விவரம் லஞ்ச-ஒழிப்புப் போலீசாருக்குத்தெரியவந்தது. விக்டர் சொன்னது போலவே அந்த லாரியின் உரிமையாளர் திருச்சிக்கு வந்து பணத்தைத் தந்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து விக்டரின் திருச்சி கருமண்டபம் ஆல்பா நகர் வீட்டை தொடர்ந்து நோட்டம் விட்டு வந்த திருநெல்வேலி லஞ்ச-ஒழிப்புப் பிரிவுபோலீசார் இரவோடு இரவாக அவரது வீட்டில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் இல்லாத ரூ. 3 லட்சம் பணம் இருந்தது.மேலும் பல சொத்துக்களையும் இவர் குவித்துள்ளதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications