அதிரடிப்படை கண்ணில் பட்டான் வீரப்பன்
கொள்ளேகால்:
வீரப்பன் இருப்பிடத்தை கர்நாடக அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு நாகப்பாவுடன் வீரப்பன் கும்பல் சென்று கொண்டிருந்ததை அதிரடிப்படையின் உளவுப் பிரிவினர் பார்த்துள்ளனர். இதையடுத்துதாக்குதல் படையினருக்கு அவர்கள் தகவல் தந்தனர்.
இதைத் தொடர்ந்து இரவோடு இரவாகவே அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக கர்நாடகம் அதிரடிப்படை வட்டாரங்கள்தெரிவித்தன.
வீரப்பன் இருக்கும் இடத்தை சில கி.மீ. தூரத்தில் நெருங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகப்பாவை இன்றே எப்படியும் மீட்டுவிட முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வீரப்பனைக் கண்டால் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதால் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்படலாம் என்பதால் ஆம்புலன்ஸ்கள்,டாக்டர்கள், நர்ஸ்கள் குழுவினர் காட்டுப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இப்போது வீரப்பன் இருப்பதாகக் கூறப்படும் ஹானூர் காட்டுப் பகுதியை ஒட்டிய அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள்உள்ளிட்ட டாக்டர்களை தயார் நிலையில் வைக்குமாறு அதிரடிப்படை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து எலந்தூர், சந்தேமரஹள்ளி, சாம்ராஜ் நகர் ஆகிய ஊர்களின் மருத்துவமனைகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளடாக்டர்கள் குழுவினர் ஹானூர் மருத்துவனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications