விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு
சென்னை:
சென்னையில் நடைபெறவுள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்படவுள்ளன.
வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. அதற்கு அடுத்த சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதையொட்டி நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல்துறைஆணையர் விஜயக்குமார் கூறுகையில்,
கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருக்கு பல அனுபவங்கள்கிடைத்தன. அதை மனதில் வைத்து இந்தமுறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்கப்படும்.
இந்த முறை நல்ல முறையில் விநாயகர்சிலை ஊர்வலத்தை நடத்தி தருவதாக இந்து அமைப்புகள் கூறியுள்ளன.
இம் முறை விநாயர் சிலை ஊர்வலத்தில் 5000 சிலைகள் வரை பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவரை 2 அமைப்புகள் ஊர்வலத்திற்கு அனுமதி கோயுள்ளனர். இதில் இந்து முன்னணி 15ம் தேதியை கேட்டுள்ளது.
மற்றொரு அமைப்பு நான்கு குழுக்களாகப் பிரிந்து ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்த குழுவுக்கு வாகனங்களில் ஊர்வலம்செல்லத் தான் அனுமதி தரப் போகிறோம். ஊர்வலமாக நடந்து செல்ல அனுமதி தரப்படாது.
அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்த எந்தப் பாதையில், எப்போது ஊர்வலம் நடத்த அனுமதி தருவது என்பது குறித்துமுடிவெடுக்கப்படும். சிலைகளை நிறுவியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது, போலீஸார்தான் அதை பாதுகாக்க வேண்டும் என்றுயாரும் நினைக்கக் கூடாது.
சிலைகளை நிறுவியவர்களுக்கும் அதைப் பாதுகாக்க வேண்டிய கடமை உண்டு. விநாயர் சிலை ஊர்வலப் பாதுகாப்புப் பணியில் 6,000போலீசார் ஈடுபடுத்தப்படுவர்.
போலீஸார் தவிர, ஊர்க்காவல் படையினர், சிறப்புக்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications