இன்று திடீர் காவிரி ஆணையக் கூட்டம்: டெல்லி செல்ல ஜெ. மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று கர்நாடகத்தின் பிடிவாதத்தால் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து இன்று திடீரென காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.

ஆனால், இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்துவிட்டார். அவருக்குப் பதில் நிதியமைச்சர் பொன்னையனை ஜெயலலிதா டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

நேற்று நடந்த கண்கணிக்குக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து 1.25 டி.எம்.சி. நீர் விட முடியாது என்றும்0.7 டி.எம்.சி. நீர் தான் தர முடியும் என்றும் கர்நாடகம் திமிர் பேசியது.

இதை ஏற்க தமிழக தலைமைச் செயலாளர் மறுத்துவிட்டார். இதனால் அக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இந் நிலையில் நாளை வாஜ்பாய் அமெரிக்கா செல்வதால் உடனடியாகக் காவிரிக் கண்காணிப்புக் குழுவைக் கூட்டவேண்டும் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

வாஜ்பாய் அமெரிக்காவில் இருந்து திரும்பும் வரை தினமும் தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. நீர் தர முடியாது எனவும்அது குறித்து உடனே விவாதிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணா கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து காவிரிக் கண்காணிப்புக் கூட்டத்தை வாஜ்பாய் இன்று கூட்டியுள்ளார். இக் கூட்டத்தில் தமிழகத்துக்குஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தந்து வரும் நீரின் அளவைக் குறைக்க கர்நாடகம் கோரிக்கை வைக்கும். அதைவாஜ்பாய் ஏற்றால் கர்நாடகத்தில் இருந்து கடந்த இரு நாட்களாக வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு குறையும்(அது கூட ஒழுங்காய் வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இதனால், இந்தக் கூட்டத்தை உடனே கூட்டுவதை தமிழகம் எதிர்த்து வருகிறது. ஆனால், தமிழகத்தின்ஆட்சேபத்தையும் மீறி கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று பிரதமர் வாஜ்பாய் உடனடியாக காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தை இன்று மாலைக்குக் கூட்டியுள்ளார்.

ஆனால், வாஜ்பாயின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தைப் புறக்கணிக்க ஜெயலலிதாமுடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இருப்பினும் இக் கூட்டத்தில் தமிழகத்தின நிலையை எடுத்துச் சொல்ல நிதியமைச்சர் பொன்னையனை ஜெயலலிதாடெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து அமைச்சர்களுடன் நேற்றிரவு 11 மணிக்கு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

இன்றைய ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாக முடிவு எடுக்கப்பட்டால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டைஅணுகுவது என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+