மேயர் தேர்தல்: திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தல் அக்டோபரில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது திமுகசார்பில் பரிதி இளம்வழுதி நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி, ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது.இதை எதிர்த்துதொடரப்பட்ட வழக்கில் ஸ்டாலின் பதவி பறிப்பு செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இருப்பினும், சென்னை மாநகராட்சி சட்டப்படி ஸ்டாலின் இரண்டாவது முறையாக மேயர் பதவி வகித்ததும்செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதனால் மீண்டும் மேயராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அப்பதவி காலியாக உள்ளது.
உள்ளாட்சிப் பதவிகளில் காலியாகும் பதவிகளுக்கு ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுவழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் தான் இது போன்ற ஒரு தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியது.
இனி அடுதத தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. அப்போது சென்னை மாநகராட்சியின் மேயர்பதவிக்கும் தேர்தல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மேயர் தேர்தலில் இம் முறை திமுக சார்பில் பரிதி இளம்வழுதி நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக உள்ள பரிதி சட்டசபையிலும் வெளியிலும் அரசுக்கு எதிராகப்போராடுவதில் மிகுந்த திறமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் இளைய தலைமுறைத் தலைவர்களில் மிக முக்கியமானவர்.
அதிமுக சார்பில் இப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜனே நிறுத்தப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
-->
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications