மும்பை- மாலத்தீவு விமானத்தை கடத்த முயற்சி
கொழும்பு:
மும்பையில் இருந்து இன்று காலை மாலத் தீவுகள் சென்ற போயிங் 737 ரக விமானத்தைக் கடத்த முயற்சி நடந்தது. ஆனால்,கடத்தல்காரனையும் அவனது கூட்டாளியையும் விமான ஊழியர்கள் தாக்கி அடக்கியதால் கடத்தல் முயற்சி தோல்வியடைந்தது.
அந்த 2 கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர். இருவரிடமும் இந்திய பாஸ்போர்ட்கள் உள்ளன.
மும்பையில் இருந்து இன்று அதிகாலை 2.56 மணிக்கு ஏர்-செசல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் செ சல்ஸ் தீவுகளுக்குக்கிளம்பியது. அது மாலத்தீவுகள் தலைநகர் மாலேயில் தரையிறங்கிச் செல்லத் திட்டமிட்டிருந்தது.
இந்த விமானம் காலை 4.20 மணி வரை மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டில் பறந்து கொண்டிருந்தது. மாலத்தீவுகளை அந்த விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பயணிகளில் ஒருவன் கத்தியோடு காக்பிட் நோக்கி ஓடினான்.காக்பிட்டுக்குள் நுழைந்து விமானிகளைத் தாக்க முயன்ற அவனை விமான சிப்பந்திகளும் பயணிகளும் சேர்ந்து தாக்கினர். இதில் ஒருவிமான ஊழியர் காயமடைந்தார்.
பயணிகளும் ஊழியர்களும் தாக்கியதில் அந்தக் கடத்தகாரன் நிலை குலைந்தான். விமானம் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அது காலை 5மணிக்கு மாலத்தீவு தலைநகர் மாலேயில் பத்திரமாக தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதும் மாலத் தீவு அதிரடிப்படையின் உள்ளே புகுந்து விமானத்தைக் கடத்த முயன்றவனையும் அவனது சகாவையும்கைது செய்தனர். இருவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.
விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக அந்தக் கடத்தல்காரன் மிரட்டியதால் விமானம் முழுமையாக சோதனையிடப்பட்டது. அனைத்துபயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை.
இச் சம்பவம் நடந்தபோது பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கடத்தல் குறித்தே பலருக்கு தரை இறங்கும் வரைதெரியவில்லை.
பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இந்த விமானத்தில் 64 பயணிகள் இருந்தனர். (முதலில் 200 பேர் இருந்ததாகத் தகவல்வந்தது).
அமெரிக்காவில் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடந்த செப்டம்பர் 11ம் தேதி நெருஙகுவதால் உலகம் முழுவதுமே விமானநிலையங்களில் பாதுகாப்பும் கண்காணிப்பும் சோதனைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை உள்பட இந்திய விமான நிலையங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் இந்தப் பயணி எப்படிகத்தியுடன் விமானத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்று தெரியவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயம் என்பதால் இந்தியவிமான நிலையங்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க உயர்மட்டக் கூட்டத்தை விமானத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன்கூட்டியுள்ளார்.
கடத்தல்காரன் குறித்து மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் எந்தத் தகவலும் தரவில்லை என்றும் தெரிகிறது. அந்த விமானிகள் ஏன்அப்படிச் செய்தனர் என்று தெரியவில்லை.
பிடிபட்ட அந்தக் கடத்தல்காரனிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததால் அவன் இந்தியன் என்று கருதப்படுகிறது. இன்னொருவனிடமும்இந்திய பாஸ்போர்ட் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதை வைத்து அவர்கள் இந்தியர்கள் என்று கருதிவிடத் தயாராக இல்லை எனமாலத்தீவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications