தமிழகத்துக்கு 0.8 டி.எம்.சி. தந்தால் போதும்: கர்நாடகத்துக்கு ஆதரவாக வாஜ்பாய் தீர்ப்பு
டெல்லி:
காவிரியில் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை பிரதமர்வாஜ்பாய் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர தமிழகம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடக்கும் வரை தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீர்தருமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் கூட்டத்தை உடனே கூட்டச் சொல்லி கர்நாடகம் வற்புறுத்தியது. இதற்குப் பணிந்து வாஜ்பாய் நேற்று இரவுஇந்தக் கூட்டத்தைக் கூட்டினார்.
அதில் பேசிய கர்நாடக முதல்வர் தமிழகத்துக்கு 0.7 டி.எம்.சி. நீரைத் தான் தர முடியும் என்றார். தமிழகத்தில்சார்பில் பேசிய நிதியமைச்சர் பொன்னையன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தொடர்ந்து 1.25 டி.எம்.சி. தர வேண்டும்என்றார்.
ஆனால், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிரதமர் வாஜ்பாய் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி. தண்ணீர்தருமாறு உத்தரவிட்டார்.
பிரதரின் இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த பொன்னையன் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து முதல்வர்ஜெயலலிதாவைத் தொடர்பு கொண்டு பேசினார்.
பிரதமரின் தீர்ப்பு நியாயமில்லாதது என்றும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல்செய்வோம் என்றும் ஜெயலலிதா அவரிடம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் இந்தக் கருத்தை காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம்பொன்னையன் தெரிவித்துவிட்டு வெளியேறினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications