மறக்க முடியாத செப்டம்பர் 11: அமெரிக்காவில் வாஜ்பாய்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி சரியாக ஒரு ஆண்டு முடிவடைந்துள்ள நிலையில் இந்தியப்பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.
அந்த 2 கடத்தல்காரர்ககடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி யாருமே எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவில் நான்கு விமானங்கள்தீவிரவாதிகளால் கடத்தப்பட்டன. சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா அமைப்பினர்தான் இந்த விமானங்களைக் கடத்தினர்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, ராணுவத் தலைமையகமான பென்டகன் உள்ளிட்ட பல முக்கியமானஇடங்களைத் தாக்குவதற்காகவே தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தினர்.
அதன்படி கடத்தப்பட்ட முதல் இரண்டு விமானங்கள் நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடங்களின் மீதுமோதப்பட்டன. அரை மணி நேரத்திற்குள்ளாகவே அடுத்தடுத்து இரு விமானங்களும் மோதியதில் வானளாவஉயர்ந்து நின்ற இந்த இரண்டு கட்டடங்களும் அடுத்த சிறிது நேரத்திற்குள்ளாகவே தரைமட்டமாகிவிட்டன.
இதற்கிடையே மூன்றாவது விமானமும் பென்டகனைத் தாக்கியது. ஆனால் பென்டகன் கட்டடத்தின் முக்கியப்பகுதிகள் தப்பித்து விட்டன.
இந்நிலையில் கடத்தப்பட்ட நான்காவது விமானம் பென்சில்வேனியா அருகே தரையில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த விமானம் வெள்ளை மாளிகையைத் தாக்கச் சென்றதா அல்லது சுதந்திர தேவி சிலையைத் தகர்க்கச்சென்றதா என்பது குறித்து இன்று வரை தெரியவில்லை.
இந்தத் தீவிரவாதத் தாக்குதல்களில் கட்டடங்களில் இருந்தவர்களும், விமானத்தில் பயணம் செய்தவர்களுமான3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.
ஆப்கன் மீது அமெரிக்கா தாக்குதல்:
அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக மக்களையே உலுக்கி எடுத்த இந்தத் தீவிரவாதத் தாக்குதல்களால்அமெரிக்கா வெகுண்டு எழுந்தது.
உலகின் எப்பகுதியில் தீவிரவாதம் தலை தூக்கினாலும் அதை வேரோடு தகர்த்து எறிவோம் என்று அமெரிக்காசபதம் எடுத்தது.
அதன் முதற்கட்டமாக, அல்-கொய்தா தீவிரவாதிகளின் துணையுடன் அப்போது தலிபான் தீவிரவாதிகள்கைப்பற்றியிருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியது.
அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படைகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை ஆப்கானிஸ்தான் மீதுகடுமையான தாக்குதல்களை நடத்தின.
முடிவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் முழுமையாகவிரட்டியடிக்கப்பட்டனர். தற்போது அங்கு பிரதமர் ஹமீத் கர்சாய் தலைமையில் மக்களாட்சி நடைபெற்றுவருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைத் தாக்குவதற்காக, இந்தியாவில் இன்றும் பயங்கரவாதத்தைத் தூண்டிவரும் பாகிஸ்தானை அமெரிக்கா துணைக்கு அழைத்தது தான் வேடிக்கையானது, குறிப்பிடத்தக்கதும் கூட.
முதலாண்டு நினைவு நாள்:
இந்நிலையில் அமெரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டிஅமெரிக்கா முழுவதும் ஏராளமான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து துறைமுகப் பாலத்தில் இன்று காலை அமெரிக்க தேசியக்கொடி அரைக் கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதே போல் உலகின் பல நாடுகளிலும் உள்ள அமெரிக்க மையங்கள் மற்றும் தூதரக அலுவலகங்களிலும்நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீவிரவாதிகள் மீண்டும் தாக்கலாம் என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள்உள்ளனர்.
தங்கள் தாக்குதல்களில் முதலாண்டு "வெற்றி"யைக் கொண்டாட பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதிகள்இன்றும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அனைத்துப் பாதுகாப்புகளையும் மீறி தீவிரவாதிகளின் விமானம் எதுவும் அமெரிக்க வான்பரப்பில் வட்டமடிக்கத்தொடங்கினால் தரையிலிருந்து வானத்திற்குச் சென்று தாக்குதல் ஏவுகணைகளைக் கொண்டு அந்த விமானத்தைத்தகர்க்கவும் பென்டகன் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனின் வான் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எந்தவிமானம் பறந்தாலும் ஏவுகணை வீசி அதை அழிக்க பென்டகன் திட்டமிட்டுள்ளது.
ரகசிய இடத்தில் துணை ஜனாதிபதி:
இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதியான டிக் செனாய்ரகசிய இடத்திற்குப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று இரவே அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.
அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
பல தூதரகங்கள் மூடல்:
இதற்கிடையே இந்த செப்டம்பர் 11ம் தேதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில்உலகெங்கிலும் உள்ள 11 அமெரிக்கத் தூதரகங்கள் இன்று மூடப்பட்டன.
இவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில், முக்கியமாக அரபு நாடுகளில் உள்ளவை ஆகும். பல தூதரகங்கள்நேற்றே மூடப்பட்டு விட்டன.
இன்று முழுவதும் இந்த 11 தூதரகங்களும் மூடப்பட்டிருக்கும். சி.ஐ.ஏ. தரும் தகவல்களின் அடிப்படையில் மேலும்பல நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களும் மூடப்படும் என்று தெரிகிறது.
அமெரிக்காவில் வாஜ்பாய்:
இந்நிலையில் தான் வாஜ்பாய் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர்சென்றுள்ளார். வரும் 13ம் தேதி வாஜ்பாய் ஐ.நாவில் உரையாற்றுகிறார்.
வாஜ்பாயுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ்மிஸ்ரா, வெளியுறவுத்துறைச் செயலாலர் கன்வல் சிபல் உள்ளிட்டோரும் நியூயார்க் சென்றனர்.
நாளை அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்திக்கும் வாஜ்பாய், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரஇடம் வழங்குவது குறித்து அவரிடம் வலியுறுத்தவுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications