கோவையில் தமிழர் விடுதலை இயக்க பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
செகோயம்புத்தூர்:
அதைமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் பொடா சட்டத்தின் கீழ் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதிகோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சீதாராமன் கைது செய்யப்பட்டார்.
கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் உள்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய சீதாராமனைஅரியலூர், விருத்தாசலம் மற்றும் கடலூர் போலீசார் தேடி வந்தனர்.
அவருக்கும் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள, தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழர் விடுதலைப்படைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகபோலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் அரியலூர் போலீசாரிடம் சீதாராமன் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications