போராட்டத்திற்கு "குட்பை" கூறிய அரசுக் கல்லூரி மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அனைத்து மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசுக் கல்லூரி மாணவர்கள் வரும் திங்கள்கிழமைமுதல் வகுப்புகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

அதிமுக மாணவர் அணி சார்பில் கல்வி அமைச்சர் தம்பிதுரையை பார்க்க அரசுக் கல்லூரி மாணவர்கள்சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதன் அவசியத்தை அவர்களிடம் தம்பிதுரைவிளக்கினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் மாணவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். பல்கலைக்கழகங்களுடன் அரசுக்கல்லூரிகள் இணைக்கப்பட்ட பின்னர் அம்மாணவர்களின் கல்லூரிக் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாதுஎன்று அப்போது உறுதியளிக்கப்பட்டது.

மேலும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையும், பிற்படுத்தப்பட்ட மற்றும்தாழ்த்தப்பட்ட-பழங்குடி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடும் நிறுத்தப்படாது என்றும் அரசுஉத்தரவாதம் அளித்தது.

இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தையும் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வரும்திங்கள்கிழமை முதல் வகுப்புகளுக்குப் போக மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அரசுக் கல்லூரி மாணவர்களின் ஒரு மாத காலப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+